போக்குவ‌ர‌த்து நெரிச‌லைத் த‌விர்ப்போம்

போக்குவ‌ர‌த்து நெரிச‌லைத் த‌விர்ப்போம்!   சாலைப் பாதுகாப்பைக் காப்போம்!

விருக‌ம்பாக்க‌ம், ரெட்டி தெருவும், காளிய‌ம்ம‌ன் கோயில் தெருவும் ச‌ந்திக்கும் முனையில் எந்நேர‌மும் போக்குவ‌ர‌த்து நெரிச‌ல் க‌ட்டுக்க‌ட‌ங்காம‌ல் உள்ள‌து.

1) கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்திலிருந்து தி. ந‌க‌ர் செல்லும்  M 27 இந்த‌த் த‌ட‌த்தின் வ‌ழி தான் ப‌ய‌னிக்கிற‌து. இந்த‌ப் பேருந்து கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்திலிருந்து நேர‌டியாக‌ 100 அடி சாலையில் ப‌ய‌னித்து, இட‌ப்புற‌ம் திரும்பி (வ‌ட‌ப‌ழ‌னி கோயில் த‌ட‌ம்) வ‌ழ‌க்க‌மான‌ பாதையில் செல்ல‌லாம்.

2) பிராட்வேயிலிருந்து வ‌ட‌ப‌ழ‌னி பேருந்து நிலைய‌ம் வ‌ரை ப‌ய‌னிக்கும் 15 F பேருந்தும் கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்திலிருந்து 100 அடி சாலையில் ப‌ய‌னித்து வ‌ல‌ப்புற‌ம் திரும்பி (சிக்ன‌ல் விதிக‌ளுக்கேற்ப‌) வ‌ட‌ப‌ழ‌னி பேருந்து நிலைய‌த்தை அடைய‌லாம்.

3) கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்திலிருந்து அய்ய‌ப்ப‌ன் தாங்க‌ல் பேருந்து நிலைய‌ம் செல்லும் 16J,  16K, 16M போன்ற‌ பேருந்துக‌ளும் கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்திலிருந்து 100 அடி சாலையில் ப‌ய‌னித்து, வ‌ல‌ப்புற‌ம் திரும்பி, (சிக்ன‌ல் விதிக‌ளுக்கேற்ப‌) வ‌ட‌ப‌ழ‌னி, ஆற்காடு சாலை வ‌ழியாக‌ போரூர், அய்ய‌ப்ப‌ன் தாங்க‌லை சென்ற‌டைய‌லாம்.

இந்த‌ 3 த‌ட‌ங்க‌ளிலும் ப‌ய‌னிக்கும் பேருந்துக‌ள் கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்திற்கும், பிராட்வேக்கும் செல்லுகையிலும் ரெட்டி தெரு வ‌ழியாக‌ ப‌ய‌னிக்காம‌ல் 100 அடி சாலை வ‌ழியாக‌வே கோய‌ம்பேடு பேருந்து நிலைய‌த்தை சென்ற‌டைய‌லாம்.

ரெட்டி தெரு ஓர் குடியிருப்புப் ப‌குதியாகும். இது ஓர் குறுகிய‌ சாலையாகும்.  இது ஒரு வ‌ழிப் பாதையும் அல்ல‌. எந்நேர‌மும் இரு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ங்க‌ளும், மூன்று ச‌க்க‌ர‌ வாக‌ன‌ங்க‌ளும், நான்கு ச‌க்க‌ர‌ வாக‌ன‌ங்க‌ளும் ப‌ய‌னித்துக் கொண்டிருப்ப‌தால் இ்ந்த‌ ரெட்டித்தெருவில் குடியிருப்போர் தெருவில் இற‌ங்கி ந‌ட‌க்க‌க்கூட‌ சிர‌ம‌ப்ப‌டுகின்ற‌ன‌ர்.

கோய‌ம்பேட்டிலிருந்து சின்ம‌யா ந‌க‌ர், சாய் ந‌க‌ர்,  ந‌டேச‌ ந‌க‌ர், இ்ள‌ங்கோ ந‌க‌ர், ரெட்டி தெரு, ஆற்காடு சாலை வ‌ழியாக‌ வ‌ட‌ப‌ழ‌னி வ‌ரை   ஷேர் ஆட்டோக்க‌ள் ப‌ய‌னிக்கின்ற‌ன‌. அதே போல் வ‌ட‌ப‌ழ‌னியிலிருந்தும், கோய‌ம்பேடு வ‌ரை ஷேர் ஆட்டோக்க‌ள் ப‌ய‌னிக்கின்ற‌ன‌. ஆக‌வே, இந்த‌ வ‌ழியை உபயோகிப்ப‌வ‌ர்க‌ள் பேருந்து மாற்று வ‌ழித் த‌ட‌ங்க‌ளால் பாதிக்க‌ப் ப‌ட‌ மாட்டார்க‌ள்.

என‌வே, இத‌ற்குரிய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை போக்குவ‌ர‌த்துத் துறையின‌ர் விரைந்து மேற்கொள்ளுமாறு இப்ப‌குதி வாழ் ம‌க்க‌ள் கோரிக்கை வைக்கின்ற‌ன‌ர்.