சங்காபிஷேகம்
ஸ்ரீ பைரவசாயி திருக்கோவிலில் 03-11-19 அன்று வெகு விமரிசையாக நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்றுவருகிறது. மண்டலாபிஷேகம் 17-12-2019 அன்று நிறைவடைகிறது. இவ்வைபவத்தையொட்டி 17-12-19 புதன் அன்று காலை ஸ்ரீ பைரவ சாய்நாதற்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
சங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஷ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தத்தினால் ஸ்ரீ பைரவ சாய்நாதரை அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்கி நமது பூர்வ ஜென்ம பாபங்களை நீக்கி, சகல தோஷ நிவர்த்தி பெற செய்கிறது .
கோவில்களில் இறைவனை குளிர்விக்க, சங்காபிஷேக பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகம் சாய் பூஜையில் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
இத்தகைய சிறப்பு மிக்க சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபட்டு ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெற்று ஸ்ரீ சாய்நாதரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம், சங்காபிஷேகத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ள பத்தகோடிகள் கிழ் காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 91765 66648 , 94459 00072. Land line 22476833.