SANCHU Animal Hospital launches second facility with dedicated R&D center for Pet treatment & Diagnostics

Animal Hospital

நோய் அறிதலுக்கான பிரத்யேக ஆராய்ச்சி – மேம்பாட்டு மையத்துடன்செல்லப் பிராணிகளுக்குசிகிச்சை அளிக்கசென்னை பாலவாக்கத்தில் `Sanchu’ மருத்துவமனையின் 2வது கிளை துவக்கம்.

மூத்த மருத்துவர்கள் குழு தலைமையில்12 பிரிவுகளில் சிறப்பு சிகிச்சை

——-

செல்லப்பிராணிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வரும் Sanchu மருத்துவமனை தனது 2வது கிளையை சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் துவக்கி உள்ளது. பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையான இந்த மருத்துவமனை 6 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. இங்கு நோய் அறிதலுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் உள்ளது. செல்லப் பிராணிகளுக்கான நோய்களை கண்டறிந்து அதற்கான சிறப்பு சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் குழு இம்மருத்துவமனையில் உள்ளது. பல்வேறு சுகாதார சிறப்புகளை உள்ளடக்கிய இந்த பல்நோக்கு மருத்துவமனை குறைந்தகட்டணத்தில்சிறப்பான சேவைகளை வழங்குகிறது.கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் ஆலோசனைகளை பெற மருத்துவமனைக்கு நேரில் வரலாம் அல்லது +91- 8925500830/31என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.




Sanchu Animal Hospital

இங்கு கட்டப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவமனையானது சர்வதேச தரத்தில் செல்லப் பிராணிகளை பராமரிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செல்லப் பிராணிகளின் நோய்களை கண்டறிவதற்காக பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவும் இங்கு உள்ளது. இங்கு 12க்கும் மேற்பட்ட பிரிவுகளை உள்ளடக்கிய, 10 உறுப்பினர்கள் குழு தலைமையிலான மையம் தற்போது மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.உலகத்தரம் வாய்ந்த செல்லப் பிராணிகள் பராமரிப்பு மற்றும் நோயறிதல்களை கண்டறிய அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்கள் இந்த மையத்தில் உள்ளன.




Sanchu Animal Hospital

இந்த புதிய மருத்துவமனை திறப்பு விழாவில் Sanchu கால்நடை மருத்துவமனை நிறுவனர் சி.கே. ரங்கநாதன் கூறுகையில், எங்களின் 2வது மருத்துவமனையை சென்னை நகரில் திறப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.செல்லப்பிராணிகளுக்குஉலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு சிகிச்சை மற்றும் நோய் அறிதலுக்கான பிரத்யேக ஆராய்ச்சி மற்று மேம்பாட்டு பிரிவை துவக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மூத்த மருத்துவர்கள்தலைமையிலான குழு ஆதரவுடன், இந்த புதிய மருத்துவமனையில் உள்ள Sanchu ஆராய்ச்சிமையமானது மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதற்காகவிடாமுயற்சியுடன் செயல்படும். மேலும் இந்த மருத்துவமனைசெல்லப்பிராணி பராமரிப்பில் நிச்சயமாக ஒரு புதிய அளவுகோலை எட்டும். எங்களின் முதல் மருத்துவமனை மூலம்சிக்கலான நோய்கள் பாதித்த பல விலங்குகளுக்கு நாங்கள் சிறப்பான சிகிச்சை அளித்து அவற்றை காப்பாற்றி உள்ளோம்.  தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த 2வது மருத்துவமனை மூலம் எங்களின் செயல்பாடுகள் மேலும் விரிவடையும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.

பாலவாக்கத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள Sanchu கால் நடை மருத்துவமனை, குறைந்த கட்டணத்தில் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளை வழங்குகிறது.இந்த மருத்துவமனையில் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க 12 சிறப்பு பிரிவுகள் உள்ளன. அதில்எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சைக்கான எலும்பியல் பிரிவு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், இதயம், சிறுநீரகம், கல்லீரல்பரிசோதனைக்கானஉள் மருத்துவ பிரிவு, எலும்பு மற்றும் மூட்டு, மென்மையான திசு,கண், குடும்ப திட்டமிடல் போன்றவற்றிற்கான அறுவை சிகிச்சை பிரிவு, பறவைகளுக்கான சிகிச்சை பிரிவு, ஊட்டச்சத்து ஆலோசனை, தோல் சிகிச்சை பிரிவு, பல் மருத்துவம்,இருதயவியல் பிரிவு, உள் மருத்துவம், நரம்பியல் பிரிவு, கண் மருத்துவம், பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வுசிகிச்சை மையம் ஆகியவை உள்ளன. இம்மருத்துவமனையில் பல் நோக்கு உபகரணங்களுடன் கூடிய நோய் கண்டறிதல் பிரிவு, கதிரியக்கவியல்  பிரிவு உள்ளது.




Sanchu Animal Hospital

அவசர மற்றும் சிக்கலான பராமரிப்பு சேவைகளுக்கான சிறப்பு மருத்துவர்களும் இம்மருத்துவமனையில் உள்ளனர். இவற்றைத் தவிர இங்கு செல்லப் பிராணிகளுக்கான அழகு நிலையம், சலூன்,  ஆன்லைன் பதிவு, தங்கும் விடுதி,  சூப்பர் மார்க்கெட், உள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது.

இந்த மருத்துவமனை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை, எண்.1/85 என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றுக்கான பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற மருத்துவமனைக்கு நேரில் வரலாம் அல்லது +91- 8925500830/31என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இம்மருத்துவமனையின் www.sanchuanimalhospital.com என்ற அதன் இணையதளத்தை பார்வையிடலாம்.

Send your General News, Neighbourhood News, Local News, Events, Press releases, Product Press Release, Executive, Staff & Employee Press Release, Expert Position Press Release, Launch Release, Articles, Stories to timeslocalnewspaper@gmail.com , Whatsapp 84281 82676