Hyundai Motor India Foundation Delivers Oxygen Concentrators & Medical Supplies

Hyundai Motor India Foundation Delivers Oxygen Concentrators

Hyundai Motor India Foundation Delivers Oxygen Concentrators & Medical Supplies to Government Head Quarters Hospital in Kancheepuram

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது 




ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிலிமிடெட்-ன் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) இன்று 25 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3,100 சுய-பாதுகாப்பு பொருட்கள், 5,000 என்-95 முகக்கவசங்கள், 700 ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் 600 லிட்டர் கிருமிநாசினி திரவம் ஆகியவற்றை காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எழிலரசன் அவர்கள் முன்னிலையில் மருத்துவமனையின் இணை இயக்குனர் டாக்டர் A. ஜீவா, MBBS அவர்களிடம் வழங்கப்பட்டது. ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழான ‘Back to Life’ மூலம் இந்தியா முழுவதும் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உபகரணங்கள் வாங்கப்பட்டு விரைவாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் கேர்ஸ் 3.0 கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதை துரிதப்படுத்தி, அவை மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா, புது தில்லி மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. 




Hyundai Motor India Foundation Delivers Oxygen Concentrators

படத்தில் (இடமிருந்து வலம்): திரு. கணேஷ் மணி S, ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர், 25 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 3,100 சுய-பாதுகாப்பு பொருட்கள், 5,000 என்-95 முகக்கவசங்கள், 700 ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் 600 லிட்டர் கிருமிநாசினி திரவம் ஆகியவற்றை காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எழிலரசன் அவர்கள் முன்னிலையில் மருத்துவமனையின் இணை இயக்குனர் டாக்டர் A. ஜீவா, MBBS அவர்களிடம் வழங்கினார்.