Awareness – The war against drugs

Sub-Inspector Rani of Nazarathpet Police-Station

போதைப்பொருள் மீதான போர்

போதைக்கு எதிரான போர் இது தமிழக அரசின் முன் முயற்சியாகும்.  போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் போதைக்கு அடிமையானால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும், போதைப் பொருள்களை வைத்திருந்தாலோ விற்றாலோ என்னென்ன தண்டனை போன்ற தகவல்களை  பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கல்லூரி மாணவர்களிடையே  சென்னை நகர காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.




இதன் தொடர்ச்சியாக நசரத்பேட்டை காவல் நிலைய துணை ஆய்வாளர் ராணி அவர்கள், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை மாணவர்களிடையே விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்,  காவல்துறை அதிகாரிகள்  மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே காணொளி காட்சிகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருடன், பேராசிரியர்கள் மற்றும் பல்துறை ஊழியரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.   கல்லூரி முதல்வர்  டாக்டர் சித்தரஞ்சன் தாஸ்,  துணை முதல்வர் டாக்டர் பிரவின் மற்றும் நிர்வாக அதிகாரி சங்கரநாராயணன் ஆகியோர் காவல் துறையினருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.