சங்கர நேத்ராலயாவின்  ஆரஞ்சு விஷன் சென்டர்

eye hospital valasaravakkam

சங்கர நேத்ராலயாவின்  ஆரஞ்சு விஷன் சென்டர்

 பார்வைக்கான கோளாறுகள் பல வகை. சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் 2030  ஆண்டிற்குள் அனை த்து நாடுகளுக்குமான கண் பார்வை கோளாறுகளுக்கும் கண் புரைக்குமான இலக்குகளை நிர்ணயித்தது. பார்வை கோளாறுகள் இருக்கும் சதவிகிதத்தில் இருந்து 40%  குறைக்கவும், கண் வுரையை 30  குறைக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது. பார்வை கோளாறுகளும், கண் புரையுமே  உலக அளவில் கண் கோளாறுகளில் அதிக அளவில் காணப் படுகிறது. இவற்றைத் தவிர கண் அழுத்த நோய் (Glaucoma)  சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு போன்றவையும் அதிக அளவில் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட கண் கோளாறுகளை கண்டறிய மக்களுக்கு மிக அருகிலேயே கண் நலத்திற்கான மருத்துவ நிலையங்களை துவக்கி வைக்க பரிந்துரைக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையங்கள் முழுமையான பயிற்சி பெற்ற பார்வைக்கான வல்லுநர்களை வைத்து நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. Optometrists  என்பவர் பார்வைக்கான முதன்மை பாதுகாப்பு வல்லுநர்கள். இவர்கள் கண்களை முழுமையாகப் பரிசோதிக்கவும், தேவையான நேரம் மற்ற வல்லுநர்களுக்கு பரிந்துரை அளிக்கவும் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள்




இந்த வல்லுநர்கள் கண்களை முழுமையாகப் பரிசோதனை செய்து எப்படி நோயாளிகளுக்கு உதவினார்கள் என்று பார்ப்போம். சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை வளசரவாக்கத்தில் புதிதாகத் திறந்துள்ள ஆரஞ்சு விஷன் சென்டருக்கு ஒரு எட்டு வயது சிறுவனை அவன் அம்மா அழைத்துக்கொண்டு வந்தார். பள்ளியில் நடந்த முகாமில் அவன் பார்வையில் கோளாறு இருப்பதாகவும் மேலும் பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தி இருந்தனர். மிகுந்த கவலையோடு வந்த அவன் அம்மா இதை பகிர்ந்து கொண்டார். அச்சிறுவனுக்கு கண் பார்வை எப்படி இருக்கிறது, கண்ணாடி தேவை இருக்கிறதா என்று பார்த்தது மட்டுமல்லாது, கண் ஆரோக்கியம் , விழித்திரை மற்றும் கண் நரம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா ஆகியவையையும் இந்த நிலையத்தில் பரிசோதித்தனர். சிறுவனுக்குக் கிட்டப் பார்வை இருப்பதும் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் மற்றும் அவன் அம்மாவிற்கு கிட்டப் பார்வை மேலும் அதிகம் ஆகாமல் இருப்பதற்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. கண்ணாடி அணியப் பிடிக்காத சிறுவன் அங்கிருந்த கண்ணாடிககளை பார்த்து பிடித்துப் போய் இரண்டு பிரேம்களை தேர்ந்தெடுத்து வாங்கி கொண்டான். அம்மாவும் நிம்மதி அடைந்தார்.




எழுபது வயதான அம்மையார் ஒருவர் கண் புரை செய்து கொள்ள வேண்டுமா என்று அறிவதற்காக வந்தார். அவர் மகனிற்கோ இங்கு அதெல்லாம் பார்ப்பார்களா என்று சந்தேகம். ஆனால் வீட்டிற்கு பக்கத்திலேயே இருப்பதால் இங்கே வந்து கேட்கலாம் என்று வந்தார். அவரது அம்மாவிற்கு கண் புரைக்கான பரிசோதனை மட்டுமின்றி கண் அழுத்தம், விழித்திரை பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பார்வை நல்ல முறையில் இருப்பதால் கண் புரை சிகிச்சைக்கு மேலும் 6 மாதம் காத்திருக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அவர் மகன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வீட்டிற்கு அருகிலேயே சிறந்த முறையில் அனைத்து கண் பரிசோதனைகளையும் முடித்து கொண்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தார்.  இப்படி எந்த கண் கோளாறுகளுக்கும் இந்த மருத்துவ சேவை மையத்திற்கு வந்து பயன் பெறலாம்.

 சங்கர நேத்ராலயாவின்  ஆரஞ்சு விஷன் சென்டர் திங்கள் முதல் சனி வரை காலை  9.00  மணி முதல் 5.00 மணி வரை செயல்படும். வளசரவாக்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் கண்களை பரிசோதித்துக்கொள்ளவும், கண் ஆரோக்கியத்தை பேணி பயன் பெரும் வகையில் இந்த நிலையம் திறக்கப்பட்டுள்ளது.




சங்கர நேத்ராலயாவின்  ஆரஞ்சு விஷன் சென்டர்

திங்கள் முதல் சனி வரை காலை  9.00  மணி முதல் 5.00 மணி

Ph No: 044 3501 0071, 3501 0072, 7305985929

Website: www.sankaranethralaya.org