கதையும் கானமும்
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 19, 2026 அன்று நடைபெற்ற நவராத்திரி கொலு விழாவில், கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகள் ரிதிஷா திருக்குமரன் மற்றும் தீக்ஷா பாலசந்திரன் ‘ கதையும் கானமும் ‘ என்கிற தலைப்பில் அருமையான உபன்யாசத்தை நிகழ்த்தி அரங்கத்தினரின் கைத்தட்டல்களை பெற்றதை தொடர்ந்து, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தில் இடமிருந்து வலமாக: டாக்டர் சாய் சுப்புலட்சுமி (சிறுமிகளின் பாட்டியும் குருவும்), திருமதி சஜ்ஜன்சிங் ஆர். சவான், ஐஏஎஸ், திரு. சஜ்ஜன்சிங் ஆர். சவான், ஐஏஎஸ் (தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர்), சிறுமிகள் ரிதிஷா திருக்குமரன் மற்றும் தீக்க்ஷா பாலச்சந்திரன், பையூர் சி. கோபாலகிருஷ்ணன் (வழக்கறிஞர் மற்றும் மிருதங்க வித்வான், செயலாளர் – தெய்வீக இயல் இசை மன்றம்) மற்றும் வி.சி. சுரேஷ் (தபலா வித்வான்).

