நிர்விருதி நடனப்பள்ளியின் முதல் ஆண்டுவிழா
அக்ஷயா ஆர்ட்ஸின் இயக்குனர் கலைமாமணி குரு திரு. பினேஷ் மகாதேவன் அவர்களின் மூத்த, சிறந்த மாணவியான இளம் குரு குமாரி மோனிஷா பெருமாள் அவர்கள் துவங்கிய நிர்விருதி நடனப்பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா 18.10.2026 அன்று விருகம்பாக்கம் அக்ஷயா ஆர்ட்ஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் குரு திரு பினேஷ் மகாதேவன் முன்னிலையில், கலைமாமணி குரு டாக்டர் ஸ்ரீலதா வினோத் மற்றும் ‘பாட்டும் பரதமும்’ இதழ் ஆசிரியர் ராம்கி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
குரு குமாரி மோனிஷாவின் தனி நடன நிகழ்ச்சி மிகவும் அருமை.
நட்டுவாங்கம் திரு பினேஷ் மகாதேவன். பாட்டு திருமதி சித்ராம்பரி கிருஷ்ணகுமார், மிருதங்கம் திரு. தனஞ்ஜெயன், புல்லாங்குழல் திரு. யாகேஷ்வரன்.
அன்று குரு பினேஷ் மகாதேவனின் பிறந்த நாள். நிகழ்ச்சி முடிவில் கேக் வெட்டியும் கொண்டாடினார்.
இதைத் தொடர்ந்து, நிர்விருதி நடனப்பள்ளி மாணவியர்களின் நடன நிகழ்ச்சி ஆரம்பமானது. மொத்தம் 16 மாணவிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டு ஆடி அசத்தினார்கள்.
‘பாட்டும் பரதமும்’ இதழ் ஆசிரியர் ராம்கி மோனிஷாவிற்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

