‘AayiramNilaveyVaa’ to celebrate legendary playback singer S. P. Balasubrahmanyam

S-P-Balasubrahmanyam

COLORS Tamil presents ‘AayiramNilaveyVaa’ to celebrate legendary playback singer S. P. Balasubrahmanyam

S.P Balasubrahmanyam (SPB) is one of the greatest and most versatile singers of our time. Having rendered over 40,000 soulful songs across 16 languages, SPB has touched many lives with his booming and melodious voice. In an effort to celebrate the virtuoso and his rich contribution to the music industry as he fights back health complications, COLORS Tamil is set to telecast a specially curated tribute show, AayiramNilaveyVaa on Sunday, 20th September 2020 at 12 p.m.




S.P Balasubrahmanyam (SPB)
S.P Balasubrahmanyam (SPB)

Aptly titled after his debut songthe program besides bringing together industry doyens will also unite thousands of fans across the globe with an aim to collect wishes and pray for his recovery. From Music Director Ilayaraja to Superstar Rajinikanth, the program will showcase various artists from the Tamil film industry sharing interesting anecdotes from their interactions with SPB and collectively praying for his health. Spread across 6 hours, the tribute show will also celebrate the wide array of songs rendered by SPB across genres through mini-concerts by famous playback singers.

AayiramNilaveyVaa
AayiramNilaveyVaa




Commenting on this special presentation, Mr.AnupChandrasekharan, Business Head – COLORS Tamil, said “The mention of songs like IlayaNila and Tere Mere Beech Mein fills our heart magically with instant happiness and nostalgia. We at COLORS Tamil are happy to present this show to celebrate this magician who for years together has entertained us with his soulful voice. It is a humble effort to unite his fans from across the globe and together pray for his good health. His music has helped many of us through tough times and we at COLORS Tamil hope that AayiramNilaveyVaa will do just that for SPB to get through these trying times.” 

Prominent personalities like GangaiAmaren, VenkatPrabhu, MJ Sriram, Manoj Baharathiraja, Lyricist Kabilan, Srikanth Deva, AnuradhaSriram, Srinivas, Haricharan, Karthik, Unnikrishnan, Vijay Prakash and many more are set to take part in the show. Catch all this on COLORS Tamil in a specially curated tribute show AayiramNilaveyVaa on Sunday, 20th September 2020 at 12:00Noon.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பிபாலசுப்ரமணியத்தை கொண்டாடி கௌரவிக்கும் வகையில் கலர்ஸ் தமிழ் வழங்கும் “ஆயிரம் நிலவே வா” நிகழ்ச்சி

~இந்த ஞாயிறு செப்டம்பர் 20, மதியம் 12.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் கண்டு மகிழுங்கள் ~

நாம் வாழும் இந்த காலகட்டத்தில் மிகச்சிறந்த, அதிக பன்முகத்திறன் கொண்ட பின்னணி பாடகர்களுள் திரு. எஸ்.பி. பாலசுப்ரமணியம் (SPB) அவர்களும் ஒருவர் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்க இயலாது.  16 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான, மனதோடு ஒன்றிவிடும் பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்பிபி, அவரது மென்மையான, அழுத்தமான, மனதை வருடும் குரல்வளத்தால் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.  கோவிட்-19 தொற்றால் உருவான உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து, போரிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த இசை ஜாம்பவானையும் மற்றும் இசை தொழில்துறைக்கு அவரது செழுமையான பங்களிப்பையும் கொண்டாடும் ஒரு முயற்சியாக, கலர்ஸ் தமிழ் சிறப்பாக தொகுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியை, ஆயிரம் நிலவே வா என்ற தலைப்பில் வரும் ஞாயிறு 2020 செப்டம்பர் 20 அன்று மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யவிருக்கிறது.

திரையுலகில் முதன்முதலாக பாடி அறிமுகமான பாடலை தலைப்பாக கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது, இசைத்துறையைச் சேர்ந்த பல விற்பன்னர்களை ஒன்றாக கூட்டி வருவதோடு, பாதிப்பிலிருந்து அவர் மீண்டு வரவேண்டுமென்று மனதார விரும்பி பிரார்த்தனை செய்கின்ற உலகெங்கும் வாழும் இலட்சக்கணக்கான ரசிகர்களையும் ஒருங்கிணைக்கும்.

இசைஞானி இளையராஜாவில் தொடங்கி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், நடிகர்களும் எஸ்பிபி உடனான தங்களது பிணைப்பு, தோழமையை வெளிப்படுத்தும் வகையில் கடந்தகால ஆர்வமூட்டும் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வதோடு, அவரது உடல்நலத்திற்காக கூட்டு பிரார்த்தனையும் செய்வதை இந்நிகழ்ச்சி ஒளிபரப்புகிறது.  6 மணி நேரங்கள் நீடிக்கின்ற இந்த நிகழ்வானது, எஸ்பிபி அவர்களால் பல்வேறு வகையினங்களில் பாடப்பட்ட விரிவான இசைத்தொகுப்பின் கீழான பாடல்களை, பிரபல பின்னணி பாடகர்கள் பங்கேற்று பாடுகின்ற குட்டி கச்சேரிகள் வழியாக கொண்டாடி சிறப்பிக்கிறது.

இந்த சிறப்பு நிகழ்ச்சி பற்றி கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திருஅனூப் சந்திரசேகரன் பேசுகையில், இளையநிலா” மற்றும் “தேரே மேரே பீச் மெய்ன் போன்ற பாடல்களின் பெயர்களை கூறும்போதே நமது உள்ளங்கள் உடனடியாக மகிழ்ச்சி மற்றும் கடந்தகால மறக்கமுடியா அனுபவ உணர்வுகளால் நிறைந்துவிடும்.  பல தசாப்தங்களாக தனது மெய்மறக்கச் செய்யும் குரல்வளத்தால் நம்மை இசை வெள்ளத்தில் மூழ்கச்செய்த இந்த மாபெரும் இசைக்கலைஞனை கொண்டாடுவதற்காக இந்நிகழ்ச்சியை வழங்குவதில் கலர்ஸ் தமிழில் பணியாற்றும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  உலகெங்கும் உள்ள அவரது இலட்சக்கணக்கான ரசிகர்களை ஒருங்கிணைக்கவும் மற்றும் அவர் நல்ல உடல்நலம் பெற்று மீள பிரார்த்தனை செய்யவும் வகை செய்யும் இந்நிகழ்ச்சி எங்களது ஒரு எளிய, தாழ்மையான முயற்சியாகும். கடும் சிக்கலான காலங்களை கடந்துசெல்ல எஸ்பிபியின் இசை நம்மில் பலருக்கு பல தருணங்களில் உதவியிருக்கிறது.  நோய் பாதிப்பினால் சிக்கல் நிறைந்த இந்த காலகட்டத்தை எஸ்பிபியும் கடந்து உடல்நலத்தோடு மீண்டெழுவதற்கு ஆயிரம் நிலவே வா நிகழ்ச்சி அதே மேஜிக்கை நிகழ்த்தும் என்று கலர்ஸ் தமிழ் நம்புகிறது,” என்று கூறினார்.




கங்கை அமரன், வெங்கட் பிரபு, எம்.ஜே. ஸ்ரீராம், மனோஜ் பாரதிராஜா, பாடலாசிரியர் கபிலன், ஸ்ரீகாந்த் தேவா, அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீனிவாஸ், ஹரிசரண், கார்த்திக், உன்னிகிருஷ்ணன், விஜய் பிரகாஷ் மற்றும் பல கலைஞர்கள் இந்ந நிகழ்வில் பங்கேற்கின்றனர். ஆயிரம் நிலவே வா என்ற தலைப்பில் வரும் ஞாயிறு 2020 செப்டம்பர் 20 அன்று மதியம் 12.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் அலைவரிசையில் தவறாது கண்டு மகிழுங்கள்.  எஸ்பிபிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

கலர்ஸ் தமிழ், கீழ்க்கண்ட அனைத்து முன்னணி வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கிடைக்கிறது:  சன் டைரக்ட் (CH NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553)