Omicron Virus

omicron-virus
omicron-virus

சென்னை அடையாளம்பட்டில் அமைந்துள்ள லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், நுண்ணுயிரியல் துறை நிபுணரும் டாக்டர்.எம்.ஜி.ஆர்.
பல்கலைக்கழக துணைவேந்தருமான டாக்டர். S. கீதாலட்சுமி அவர்களிடம் தற்போது
அதிவேமாக இந்தியாவில் பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் பற்றி கேட்டு அறிந்தோம். அந்த வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அசாதாரணமான சூழ்நிலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பற்றி
விவரித்தார்.

Dr S Geethalakshmi
Dr S Geethalakshmi

இந்த ஒமைக்ரான் வைரஸ் என்றால் என்ன ?
கொரோனா தொற்றுகளில் இருந்தும் அதன் பாதிப்புகளிலிருந்தும் உலகம் கொஞ்சம்
கொஞ்சமாக மீண்டு வரும் நேரத்தில், தற்போது உருமாற்பட்ட கொரோனா வந்திருக்கிறது. வைரஸ்கள் பல மரபியல் மாறுபாட்டினால் தொற்றுக்கள் உருமாறி பல வடிவங்களில் மாறும் இயல்பை கொண்டுள்ளது. இந்த உருமாறிய கொரோனாவிற்கு உலக சுகாதார மையம் ‘ஓமைக்ரான்’ என்று பெயர் சூட்டியுள்ளது.

ஓமைக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன?
தொண்டை வலி, தொண்டையில் சிறுபுண், கொப்பளங்கள் உண்டாகும். தாங்க முடியாத தலைவலி, உடல் சோர்வு, கை-கால் மற்றும் மூட்டு வலி, தொடர் இருமல், லேசான குளிர் காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு சிறிதளவு நுரையீரல் பாதிப்பு போன்ற கொரேனா வைரஸ்களின் அறிகுறிகள் இதற்கும் பொருந்தும்.



யாருக்கெல்லாம் ஒமைக்ரான் வைரஸ் பரவும் ?
ஒமைக்ரான் வைரஸானது இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்
மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லா வயதினருக்கும் பரவி வருகிறது.

ஓமைக்ரான் வேமாக பரவும் இயல்பை கொண்டதா ?
உடலுக்கு வெளியே சுமார் 500 மடங்கு வேகத்தில் பரவக்கூடிய இந்த ஓமைக்ரான் வைரஸ், உடலுக்குள் மிகவும் குறைவான வேகத்தில் பெருகும். டெல்டா வைரசோடு
ஒப்பிடுகையில் ஒமைக்ரான் உடலினுள் குறைவாகவே பரவுகிறது. வருகின்ற ஜனவரி மாதம் ஒமைக்ரானின் முழு சுயரூபத்தை அறியலாம்.

அதன் சிகிச்சை முறைகள் என்னென்ன ?
Variant Concern – வைரஸ்கள் உரு மாறிக்கொண்டே இருப்பதால் யாருக்கு எப்படி
எந்த எந்த அறிகுறிகளுடன் பரவும் என்பது இன்னும் கண்டறியபடாததால் கொரோனா
தொற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறையே ஒமைக்ரான் தொற்றுக்கும் பின்பற்றப்படுகிறது. மருத்துவரை ஆலோசித்து Anti inflammatory Drugs, Antihistamine
மற்றும் Home Quarantine கடைப்பிடிக்க வேண்டும். சுயவிழிப்புணர்வுடன் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் ஆலோசனைகளை தவறாமல் பின்பற்றினால் எளிதில் குணம் அடைந்துவிடலாம்.

மேற்கொள்ள வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் என்ன ?
மருத்துவரை ஆலோசித்து RTPCR பரிசோதனை, CT Scan போன்ற மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். சிலவேளைகளில் RTPCR Negative ஆக கூட
இருக்கலாம்.




முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?
* தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக
பரிசோதனை செய்துக்கொள்வதும் தனிமைப்படுத்திக் கொள்வதும் அவசியம்.
* பொதுவாக கூட்டங்களையும், பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
* சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் முகக்கவசம் அணிந்து கொள்ளும்
வழக்கத்தை கண்டிப்பாக பின்பற்றுவதுமே, உருமாறிய தொற்றில் இருந்து
பாதுகாப்பு அளிக்கும்.
* முகக்கவசம் அணிவதை இன்னும் தீவரமாக கடைபிடிக்க வேண்டும்.
* அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
* மற்ற அச்சங்களை காட்டிலும் சுய விழிப்புணர்வே அவசியமானது.
* எல்லாவற்றிக்கும் மேலாக, அரசு காட்டும் வழிகாட்டுதலின் படி நடந்து
கொள்வதே, ஒமைக்ரான் மற்றும் கோவிட் பரவலின் தீவிரத்தை கட்டுபடுத்தி
குறைக்கும்.

Courtesy: டாக்டர் கீதாலட்சுமி, துணைவேந்தர். டாக்டர்.எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல் சென்னை – 600 095.