Hyundai Motor India Foundation Delivers Medical Supplies to Government Officials in Sriperumbudur

Hyundai Motor India Foundation
Hyundai Motor India Foundation

ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன் மருத்துவ உபகரணங்களை ஸ்ரீபெரும்புதூர் அரசு அதிகாரிகளிடம் வழங்கியது 

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிலிமிடெட்-ன் சமூக சேவை பிரிவாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் (HMIF) இன்று 1,000 முழு உடல் பாதுகாப்பு, 5,000 N-95 முகக்கவசங்கள், 200 ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் 660 கிருமிநாசினி பாட்டில்கள் ஆகியவற்றை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவகத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. செல்வப்பெருந்தகை அவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் P. காமேஷ் பாலாஜி, MBBS, DCH, ஸ்ரீபெரும்புதூர் ஊரக மருத்துவ அலுவலர் டாக்டர் S. ஷ்யாம் குமார், MBBS, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் திரு. R. சம்பத் மற்றும் திருமதி. பா.  பிச்சியம்மாள் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழான ‘Back to Life’ மூலம் இந்தியா முழுவதும் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உபகரணங்கள் வாங்கப்பட்டு விரைவாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.




ஹூண்டாய் கேர்ஸ் 3.0 கொரோனா நிவாரண திட்டத்தின் கீழ், ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதை துரிதப்படுத்தி, அவை மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானா, புது தில்லி மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு விரைவாக கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. 

Hyundai Motor India Foundation
Hyundai Motor India Foundation




படத்தில் (இடமிருந்து வலம்): ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் அறங்காவலர்கள் ஸ்டீபன் சுதாகர் J மற்றும் திரு. கணேஷ் மணி S ஆகியோர், 1,000 முழு உடல் பாதுகாப்பு, 5,000 என்-95 முகக்கவசங்கள், 200 ஆக்ஸிமீட்டர்கள் மற்றும் 660 பாட்டில்கள் கிருமிநாசினி திரவம் ஆகியவற்றை ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவகத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. K. செல்வப்பெருந்தகை அவர்கள் முன்னிலையில் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் P. காமேஷ் பாலாஜி, MBBS, DCH, ஸ்ரீபெரும்புதூர் ஊரக மருத்துவ அலுவலர் டாக்டர் S. ஷ்யாம் குமார், MBBS, ஊரக வளர்ச்சி அதிகாரிகள் திரு. R. சம்பத் மற்றும் திருமதி. பா.  பிச்சையம்மாள் ஆகியோரிடம் வழங்கினார்.