GEM Hospital Successfully Performed a Rare Surgery on a 6 yr. Old Boy 

Patient 6yr old boy with GEM doctors Team
Patient 6yr old boy with GEM doctors Team

GEM Hospital Successfully Performed a Rare Surgery on a 6 yr. Old Boy 

The Laparoscopic surgery was carried out on Hepatobiliary system of the patient to remove the Choledochal Cyst

ஜெம் மருத்துவமனையில் ஆறுவயது சிறுவனுக்கு பித்தநீர் எடுத்துச் செல்லும் குழாயில் நீர்கட்டியை நுண்துளை அறுவை சிகிச்சையில் அகற்றி சாதனை

Team of doctors from GEM Hospital and Research Centre, Chennai has successfully removed a choledochal cyst on the Hepatobiliary system of a 6-year-old boy from West Bengal who had suffered from frequent abdominal pain for the last few months.

When the whole world is fighting the pandemic, this little boy had his own struggles against a life-threatening cyst which may later lead to jaundice, pancreatitis, or cancer if left untreated. He was admitted to GEM Hospital on 25th June’21 and discharged on 30th June’21 after a successful surgery.

Initially, the boy’s parents were worried to go for open surgery and approached GEM Hospital Chennai to carry out the surgery with Laparoscopic technology. Minimally invasive Laparoscopic surgery on the hepatobiliary system is a challenging procedure that needs high degree of technical skill as the choledochal cyst is adjacent to major blood vessels.




Dr. P.Senthilnathan, Surgical Gastroenterologist & Director, GEM Hospital said “A normal liver produces around 800ml – 1litre of bile every day and sends it to the intestine. A cyst is formed in the bile duct of the patient which disrupts the routine and needs to be cleared. This type of complication is not because of lifestyle changes but are formed by birth. The symptoms may be seen in a born baby, an adult or even at an older age. It needs to be removed once the diagnosis is confirmed”.

Expertise in laparoscopic suturing skills are needed to perform this complex reconstruction to facilitate drainage of bile from the liver to intestine, after removal of the choledochal cyst. Laparoscopic method is more precise to carry out this surgery; the patient will have only a few centimeters of the small scar, less pain after surgery with a rapid recovery and quick return to normalcy”, he further added.




Speaking about the surgery Dr. S. Asokan, CEO and Director, GEM Hospital Chennai mentioned that, “These types of cysts need correct surgery. In untreated or incompletely excised choledochal cysts or in Choledochal cysts where they are drained into intestine by internal diversions, the average cancer rate is more than 11%. So, timely and accurate surgery eliminates the risk. GEM hospital has been a center of excellence for doing such complex surgeries with laparoscopic and robotic techniques for decades”.

Dr. C. Palanivelu, Chairman, GEM Hospitals, who is a visionary and pioneer Laparoscopic and Robotic surgeon, lauded the team for their commendable effort and mentioned that GEM Hospital has always strived to raise the standards of medicine with advanced technology and will continue to do so.

சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த சிறுவனுக்கு ஜீரண அமைப்பில் உள்ள பித்தநீர் எடுத்துச் செல்லும் குழாயில் நீர்கட்டியை அகற்றி, சென்னை ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய டாக்டர்கள் வெற்றிகரமாக சிகிச்சை செய்துள்ளனர்.

நோய் தொற்றிற்கு எதிராக உலகமே போரடிக் கொண்டிருந்தபோது, இந்த சிறுவன், பித்தப்பை குழாய் பாதிப்பால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இந்த அறுவை சிகிச்சையை உரிய சமயத்தில் மேற்கொண்டிருக்காவிட்டால், அவருக்கு மஞ்சள் காமாலை, புற்றுநோய் உள்ளிட்டவை வந்திருக்கும். சென்னை  ஜெம் மருத்துவனையில் கடந்த 25 ஜூன் 2021 முதல் 30 ஜூன் 2021 வரை அவர் மருத்துவனையில் சேர்க்கப்பட்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

துவக்கத்தில், இந்த குழந்தையின் பெற்றோர்கள், திறப்பு அறுவை சிகிச்சை முறைக்கு அச்சம் அடைந்தனர். சென்னையில் உள்ள ஜெம் மருத்துவனையில் உள்ள நுண்துளை அறுவை சிகிச்சை முறையை அறிந்து அழைத்து வந்தனர். ஜீரண மண்டலத்தில் மிகவும் சிக்கலான பகுதியில் உள்ள இந்த சிகிச்சையை மேற்கொள்வது மிகவும் சவால் மிகுந்ததாக இருந்தது. முக்கிய ரத்த நாளாத்திற்கு மிக அருகில் இருந்ததால்  மிகுந்த திறன் தேவைப்பட்டது.

ஜெம் மருத்துவமனையின்இயக்குனர் மற்றும் குடல் நோயியல் நிபுணர் டாக்டர் பி.செந்தில்நாதன்  குறுகையில், ” சாதாரணமாக ஒரு கல்லீரல் நாள் ஒன்றுக்கு 800 மி.லி முதல் 1 லிட்டர் வரை பித்தநீர் சுரக்கிறது. அதை இரைப்பைக்கு அனுப்பி வைக்கிறது. இந்த பித்தநீர் செல்லும் குழாயில் நீர்க்கட்டி ஏற்பட்டு, வழக்கமாக இரைப்பைக்கு செல்லும் பித்தநீர் அளவு குறைந்தது. இந்த அடைப்பை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது வாழ்க்கை முறையால் ஏற்பட்டது  அல்ல, பிறப்பிலேயே ஏற்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இது ஏற்படலாம். சரியான பரிசோதனையில் கண்டறிந்து, அதை நீக்க வேண்டும்.




இது போன்ற நீர்கட்டிகளை சிக்கலான இடத்தில் ஏற்படும்போது, நுண்துளை அறுவை சிகிச்சையில் அகற்ற மிகுந்த கவனம்  அவசியம். பித்தநீர் குழாயில் ஏற்படும் கட்டியை அகற்றி, மீண்டும் கல்லீரலில் இருந்து இரைப்பைக்கு பித்தநீர் செய்ய வழி செய்ய வேண்டும். லேப்ராஸ்கோபிக் முறையில் துல்லியமான முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த முறையால் நோயாளிகளுக்கு சில செ.மீ,க்கு மட்டுமே தழும்பு ஏற்படும். குறைவான வலி, விரைவாக குணமடைந்து, இயல்வான வாழ்விற்கு திரும்ப முடியும்,” என்றார்.

இந்த அறுவை சிகிச்சை குறித்து, சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இயக்குனர் டாக்டர் எஸ்.அசோகன் பேசுகையில், ” இத்தகைய கட்டியை  அகற்ற சரியான சிகிச்சை தேவை. முழுமையாக அகற்றாமல், அறைகுறையாக அகற்றினாலோ அல்லது பித்தநீரில் இந்த கட்டி கலந்து இரைப்பைக்கு சென்றாலோ புற்றுநோய் வர 11% வாய்ப்புகள் உள்ளன. சரியான நேரத்தில் துல்லியமான சிகிச்சையால் மட்டுமே இந்த  சிக்கலை தீர்க்கலாம். ஜெம் மருத்துவமனை, இத்தகைய சிக்கலான சிகிச்சையை லேப்ராஸ்கோப், ரோபோட்டிக் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளும் சிறப்பு வாய்ந்தது,” என்றார்.

லேப்ராஸ்கோபி மற்றும் ரோபாட்டிக் சிகிச்சை முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஜெம் மருத்துவமனைகளின்  தலைவர் டாக்டர் சி. பழனிவேலு, அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ  குழுவினரை பாராட்டினார். அவர், ” ஜெம் மருத்துவமனை எப்போதும் மருத்துவத்துறையின் தரத்தை  உயர்த்தி வருவதோடு, அதிநவீன தொழில்நுட்பங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது,” என்றார்.