DR. MOHAN’S ̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴

̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴

 

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வின் 100வது ஆண்டை கொண்டாடும் டாக்டர் மோகன்’ஸ்

~60 ஆண்டுகளுக்கும் அதிகமாக வகை 1 நீரிழிவுடன் ஆரோக்கியமாக வாழ்ந்துவரும் மூத்த குடிமக்களை கௌரவிக்கிறது~ 

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டதன் 100 ஆண்டுகள் நிறைவை அனுசரிக்கும் நிகழ்வில், நீரிழிவு மற்றும் அதன் சிக்கல்களுக்கான சிகிச்சையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், ‘நீரிழிவின் மீது வெற்றி கண்டதற்கான விருதுகள்’ என்பதன் முதல் பதிப்பை இன்று அறிவித்திருக்கிறது. ஆசியாவில் நீரிழிவு சிகிச்சைக்கான மிகப்பெரிய உடல்நல பராமரிப்பு குழுமங்களுள் ஒன்றாக டாக்டர். மோகன்’ஸ் குழுமம் திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இத்தகைய ஒரு விருது நிறுவப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.




DR V MOHAN
DR V MOHAN

இந்திய அரசின் பிரதம அமைச்சர் அலுவலகத்தின் துணை அமைச்சரும், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை (தனி பொறுப்பு) அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு மெய்நிகர் கூட்டத்தில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக நீரிழிவுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தளராத, ஊக்கமிக்க செயல்பாட்டை டாக்டர். சிங் மனதார பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியின்போது உரையாற்றிய, டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிறுவனர் – தலைவர் மற்றும் நீரிழிவு சிகிச்சை வல்லுநருமான டாக்டர். V. மோகன், “கோவிட் பெருந்தொற்று சூழலாக இருப்பினும் 2021 என்பது கொண்டாடப்பட வேண்டிய ஒரு ஆண்டாக இருக்கிறது. ஏனெனில், கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் 1921ம் ஆண்டில் மருத்துவ வரலாற்றில் மிக முக்கிய சாதனைகளுள் ஒன்றாக இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதை 2021ம் ஆண்டு குறிக்கிறது. மிகச்சிறப்பான இந்த கண்டுபிடிப்புக்கு முன்புவரை வகை 1 நீரிழிவுள்ள (T1D) குழந்தைகள் சில மாதங்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தனர். T1D பாதிப்புள்ளவர்கள் 2 – 3 ஆண்டுகளையும் கடந்து உயிர் வாழ்வது என்பது அந்த காலத்தில் எங்கும் கேள்விப்படாத ஒன்றாகும். இந்த நிலைமையையே இன்சுலின் அதிரடியாக முற்றிலும் மாற்றிவிட்டது. T1D நிலையுள்ள நபர்கள், பல பத்தாண்டுகளாக ஆரோக்கியமாக, அதற்கு பின்பு வாழத் தொடங்கினர். மேற்கத்திய நாடுகளில் T1D பாதிப்புள்ள நபர்கள் 80 – 90 ஆண்டுகளையும் கடந்து உயிர்வாழ்வது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் இதுநாள்வரை, T1D நீரிழிவு நிலவி உள்ள நபர்கள் நீண்ட காலம் உயிர்வாழ்வது குறித்த விவரங்கள் ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே, இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில், அதற்கு பொருத்தமான கௌரவிப்பாக நம் நாட்டில் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக T1D நிலையோடு ஆரோக்கியமாக வாழ்ந்துவரும் அத்தகைய நபர்களை அடையாளம் காணும் பணியை தொடங்குவது என்று நாங்கள் முடிவுசெய்தோம். அவர்களின் விடாமுயற்சிக்காகவும், ஆரோக்கியம் மீதான ஒழுங்குக்கட்டுப்பாட்டை பராமரிப்பதற்காகவும் அவர்களை கௌரவித்துப் பாராட்டுவது என்றும் நாங்கள் தீர்மானித்தோம்,” என்று கூறினார்.

60 ஆண்டுகளுக்கும் அதிகமாக T1D நீரிழிவு நிலையோடு ஆரோக்கியமாக வாழ்க்கையை நடத்திவருவதற்காக திரு. V.V.S. கிருஷ்ணஸ்வாமி, சென்னை; திருமதி. மினா ஃபெர்னான்டஸ், மும்பை; திரு. SRV பிரசன்னா கோயம்புத்தூர்; திருமதி. உஷா திமன், டெல்லி; திரு. ராஜிவ் கைக்கர், டெல்லி; மற்றும் திரு. ராகேஷ், குர்கான் ஆகியோருக்கு ‘டாக்டர். V. மோகன் விக்டரி ஓவர் டயாபட்டீஸ் மெடல்’-ஐ மாண்புமிகு அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் வழங்கி கௌரவித்தார். 

பிறப்பிலிருந்தே பார்வைத்திறனற்றவராக இருந்து, பிறகு வளரிளம் பருவத்தில் T1D நீரிழிவு நிலை உருவானவரான திரு. லட்சுமிநாராயணா வரிமடுகு, (சான்றிதழ் பெற்ற டிஜிட்டல் அணுகுவசதி பரிசோதனையாளர்), அவர்களுக்கு ‘டைப் 1 டயாபட்டீஸ் ஹீரோ அவார்டு’ என்பது வழங்கப்பட்டது. T1D நீரிழிவு நிலையுள்ள குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் நம்பிக்கையும், உத்வேகமும் அளிப்பவராக இவர் தொடர்ந்து செயலாற்றிவருகிறார். 

T1D உள்ள நபர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிற பல T1D அறக்கட்டளைகளுக்கு, T1D நீரிழிவு நிலையுள்ள நபர்களுக்கு ஆதரவு வழங்கி வருவதில் அவர்களது பங்கிற்காக ‘T1D அம்பாசிடர் அவார்டு’ (T1D தூதர் விருது) என்பதையும் டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் வழங்கி கௌரவித்தது.

“இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு பிறகும்கூட T1D நீரிழிவு பாதிப்புள்ள குழந்தைகளின் உயிர்கள் இழக்கப்படுவது வருத்தத்திற்குரியது. அனைத்து மானுட நபர்களுக்கும் ஒரு அடிப்படை உரிமையாக இன்சுலின் ஆக்கப்பட வேண்டும். இது நிகழுமானால் (இது விரைவில் நிகழும் என்று நான் நம்புகிறேன்), 1921-ம் ஆண்டில் கோடைகாலத்தின்போது நிகழ்ந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பை கொண்டாடுவதற்கு இது மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் இன்னும் அதிக எண்ணிக்கையில் ‘நீரிழிவு மீது வெற்றி கண்டதற்கான விருதுகளை’ வழங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். R. M. அஞ்சனா கூறினார்.




̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴
̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴

DR. MOHAN’S CELEBRATES 100 YEARS OF INSULIN DISCOVERY

̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴

On the occasion of 100 years of Insulin discovery, Dr. Mohan’s Diabetes Specialities Centre, one of the largest Healthcare groups in Asia devoted to the treatment of diabetes and its complications, today announced the first edition of ‘Victory over Diabetes Awards’. It’s a first of its kind award instituted in India.

The announcement was made at a virtual gathering in the presence of Dr. Jitendra Singh, Hon’ble  Minister of State (Independent Charge) for the Ministry of Development of North Eastern Region & Minister of State for Prime Minister’s Office, Government of India. Dr. Singh lauded Dr. Mohan’s Diabetes Specialities Centre’s unwavering endeavour over the past three decades towards diabetes treatment and care.

Speaking on the occasion, Dr. V. Mohan, Founder Chairman & Consultant Diabetologist, Dr. Mohan’s Diabetes Specialities Centre said, “Despite the pandemic, 2021 is a year to celebrateas it marks the centenary of one of the most important breakthroughs in the history of medicine – the discovery of insulin in 1921 at the University of Toronto, Canada. Prior to this landmark discovery, children with Type 1 Diabetes (T1D) lived only for a few months. Survival beyond 2-3 years with T1D was virtually unheard of at that time. Insulin changed all that dramatically and individuals with T1D started living healthily for several decades. In the West, even 80 – 90 years survival of individuals with T1D has been documented. Unfortunately, in India, long term survival of T1D individuals has not been documented till date. So as a befitting tribute to 100 years of insulin discovery, we decided to make a start towards identifying such individuals in our country who have lived healthily with T1D for over 60 years, and rewarding them for their health discipline and perseverance.” 




This year Mr. K. Krishnaswami, Chennai; Ms. Mina Fernandes, Mumbai; Mr. SRV Prasanna, Coimbatore; Ms. Usha Dhiman, Delhi; Mr. Rajiv Kaicker, Delhi; and Mr. Rakesh, Gurgaon  were presented with the ‘Dr. V. Mohan Victory over Diabetes Medal’ by Dr. Jitendra Singh for leading healthy lives with T1D for over 60 years.

Mr. Lakshminarayana Varimadugu, (Certified digital accessibility tester), who is blind since birth and later developed T1D in adolescence was presented with the ‘Type 1 Diabetes Hero Award’. He continues to be a motivation for children with T1D. 

Dr. Mohan’s Diabetes Specialities Centre also honoured several T1D Foundations started by people with T1D with the ‘T1D Ambassador Award’ for their role in providing support to those withT1D.

̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴
̴̴̴Honours veterans who have lived healthy lives with Type 1 Diabetes (T1D) for over 60 years̴

“It’s sad that even after 100 years of insulin discovery, lives of children with T1D are still being lost. Insulin should be made a fundamental right of all human beings. If this happens (and I do hope that it happens soon), it would be the best way for us to celebrate the epoch-making discovery in the summer of 1921. And we hope to present more ‘Victory over Diabetes Awards’ from next year onwards,” added Dr. R.M. Anjana, Managing Director of Dr. Mohan’s Diabetes Specialities Centre.