How to Properly Wear a Face Mask

How to Properly Wear a Face Mask

How to Properly Wear a Face Mask ?

இந்திய சுகாதார மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முகக்கவசங்களை சரியான முறையில் அணிவது எப்படி?

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுவரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்நிலையில், பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் வரும் முகக்கவசங்களினால் மக்கள் முகத்தை அலங்கரிப்பதை நாம் இப்போது பார்க்கிறோம்.

முககவசம் நம் சுவாசத்தை தூய்மையாக்கி கொரோனா போன்ற கொடிய வைரஸ்களை சுவாசப்பாதைகளுக்குள் நுழையாமல் பாதுகாக்கிறது. எனவே காற்றில் பறக்கக்கூடிய கொரோனா வைரஸ் என்பது காற்றில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குமேல் உயிர்வாழும். இதனால் நாம் சாதாரணமாக வெளியே செல்லும் போது நாம் சுவாசிக்கும் காற்றின் மூலமாக இந்த வைரஸ் தொற்று நம்மை தாக்கலாம். இதைத் தடுப்பதற்கு அனைவரும் மிகப் பாதுகாப்பான முறையில் முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும்.

சுய பாதுகாப்பு என்ற முறையில் இது நல்லது என்றாலும் , சரியான முறையில் தேர்ந்து எடுப்பது மற்றும் சரியான முறையில் அவற்றை அணிவது மிகவும் முக்கியம்.

எந்த முகக்கவசம் யாருக்கு தேவை?

நாம் பயன்படுத்தக்கூடிய முகமூடியில் ஏராளமான வகையில் உள்ளது, ஆனால் கொரோனா வைரஸை குறைப்பதற்கு நாம் மூன்று வகையான முகக் கவசங்களை பயன்படுத்தி வருகிறோம்.

முதல் வகைதான் எண் 95, இது மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் எப்போதும் சமுதாயத்தில் வேலைகளைச் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள் ஏனென்றால் இதன் விலை சற்று அதிகம் அதேபோல் அதன் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து இதை நீண்ட நேரம் நாம் பயன்படுத்தலாம்.

  • இரண்டாம் வகை நாம் அணிய பயன்படுத்தும் துணிகளால் செய்யப்பட்ட முகக்கவசம். இதை ஒருமுறை பயன்படுத்திய பின்பு வெண்ணீரில் போட்டு அதன் மேல் உள்ள அனைத்து கிருமிகளையும் அழந்த பிறகே மீண்டும் உபயோகப்படுத்த வேண்டும். எனவே இதுபோன்ற முகக்கவசங்களை வைத்திருப்பவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முகமூடிகளை வாங்கவேண்டும்.
  • மூன்றாவது வகை அறுவை சிகிச்சை செய்பவர்கள் அணியும் முகக்கவசம்  இது ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிய வேண்டும். ஒருவரின் சுவாசத்தை பொறுத்து இந்த முககவசத்தின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது இந்த முகமூடியை அணிந்து ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் தூக்கி எறிய வேண்டும்.

முகக்கவசத்தை சரியான முறையில் அணிவது எப்படி?

How to Properly Wear a Face Mask
How to Properly Wear a Face Mask
  • முகக்கவசம்அணியும் முன் 20 நொடிகள் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவுங்கள் அல்லது சானிடைஸர் போட்டு துடைத்துக்கொள்ளுங்கள்.
  • அணியும் முன் முகக்கவசத்தில் ஏதாவது உள்ளதா என பாருங்கள். நன்கு உதறிக்கொள்ளுங்கள்.
  • முகக்கவசத்தை சரியான முறையில் அணிந்த பின்னர் அதனை அடிக்கடி கீழே தாழ்த்துவதோ அல்லது உயர்திக்கொள்வதோ கூடாது.
  • மூக்கு நுனி வரை அல்லது மூக்குக்கு கீழ்வரை தாழ்த்தி அணியக்கூடாது.
  • வாயை மட்டும் மறைத்து அணியக்கூடாது.
  • தாடையை மறைக்காமல் அணியக்கூடாது.

முகக்கவசம் எப்போதும் முகத்தை ஒட்டி இருக்கும்படி இறுக்கமாக அணியவேண்டும், இடைவெளி விட்டு அணியக்கூடாது. அதேநேரத்தில் மூச்சு விடவும் எளிதாக இருக்கவேண்டும். முகக் கவசத்தை அணியும்போதும் அவிழ்க்கும்போதும் முகத்தைத் தொடாமல் இருப்பது முக்கியம்.

  • கழற்றும்போதும் முன் பகுதியை தொடாமல் காதில் மாட்டியிருக்கும் வளையத்தை மட்டும் நீக்கி ஒரு பக்கமாக கழட்டுங்கள்.

முகக்கவசம் அணிவதற்கு முன்பும் , பின்பும் நன்றாக கைகளை சோப்புப்போட்டு கழுவவேண்டும். முக கவசத்தின் சரத்தை பிடித்து அதை கழற்ற வேண்டும். முக கவசத்தின் முன்பகுதி மற்றும் நடுப்பகுதியைத் தொடவே கூடாது.

சாவி கொத்துபோல் வீட்டில் மற்றவர்களின் முகக்கவசத்தோடு சேர்த்து வைக்காதீர்கள்

உங்கள் முகக்கவசத்தை மற்றவர்களுக்கும் பகிராதீர்கள்.அவற்றை தனியாக பவுச் இருந்தால் அதில் போட்டு வையுங்கள். ஆணி இருந்தால் தனியாக தொங்க விடுங்கள்.

முகக்கவசம் அணிந்து விட்டால் மட்டுமே கொரோனா நோய் தொற்றில் இருந்து நாம் முற்றிலும் பாதுக்காப்பு பெற்றுவிட்டோம் என தவறாக எண்ணிவிடக்கூடாது.

முகக்கவசம் அணியும் போது நாம் செய்யும் ஒரு சில தவறுகள் மூலமாகக் கூட இந்த வைரஸ் தொற்று நம்மை பாதிக்கலாம். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக தெரிய படுத்துங்கள். இதன் மூலமாக கொரோனா வைரஸ் உங்களைச் சுற்றி உள்ளவரை பாதிக்காமல் தடுக்கலாம்.

சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் முகக்கவசம் அணிவது என்பது ஒரு முக்கிய பகுதி மட்டுமே , சுற்று புறங்களை தூய்மையாக வைத்திருப்பது , கைகளை சொந்தமாக வைத்திருப்பது ,சரியான சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற செயல்களின் மூலம் தான் இந்த தொற்றில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

அ. மகாலிங்கம்

இந்திய சுகாதார மேலாண்மை வல்லுனர்களின் கூட்டமைப்பு