கசுவா கிராமத்தில் சேவாலயாவின் செல்லம்மா பாரதி பணியாளர் குடியிருப்பை திறந்து வைத்தார் Page Pierre

செல்லம்மா பாரதி-workers house inaugurated
செல்லம்மா பாரதி-workers house inaugurated

கசுவா கிராமத்தில் சேவாலயாவின் செல்லம்மா பாரதி பணியாளர் குடியிருப்பை திறந்து வைத்தார் Page Pierre

Page Pierre Foundation-யை  சேர்ந்த  Page Pierre அவர்கள் கசுவா கிராமத்தில் சேவாலயாவின் செல்லம்மா பாரதி பணியாளர் குடியிருப்பை திறந்து வைத்தார்.

இந்த செல்லம்மா பாரதி ஊழியர் குடியிருப்பு கட்டுவதற்க்கான நிதிஉதவியாக  ரூ. 64,77,798 Page Pierre Foundation ஆல் வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டுவதற்க்கான நிலம் கசுவா  கிராமத்தை  சேர்ந்த மறைந்த N Selvaraj மட்டும் அவர் மகள்கள் சார்பாக சேவாலயாவிற்கு தானமாக  வழங்கப்பட்டது. இந்த குடியிருப்பு நான்கு, 1 BHK வீடுகள் அமைப்பில் கட்டப்பட்டு, சேவாலயாவின் ஊழியர்கள் தங்குவதற்காக வழங்கப்பட்டுள்ளது.




கட்டட திறப்பு விழாவில் சேவாலயா மாணவர்கள் கலை நிகழ்ச்சி வழங்கினர். Page Pierre foundation கடந்த பதின்மூன்று வருடங்களாக சேவாலயாவிற்க்கு பல்விதமான கட்டுமான பணிகளுக்காக தொடர்ந்து நிதிஉதவி அளித்து வருகின்றது. தனது சிறப்புரையில் Page Pierre அவர்கள் ஆதரவற்றோர்க்கு உதவி செய்வதற்க்கு தங்களுக்கு வாய்ப்பு வழங்கியதற்க்காக சேவாலயா நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்தார். Prof. Daniel Oyon, Academician and Consultant Page Pierre Foundation இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.




முன்னதாக சேவாலயா நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வா முரளிதரன் அவர்கள்  விழாவில் பங்கு பெற்றவர்களை வரவேற்றுப் பேசினார். பா பிரசன்னா, VP – Donor Relations நன்றியுரை  வழங்கினார்.