ஓ. ஈ. சி நிறுவனம் சார்பில் சேவாலயாவில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறப்பு
தனது சி.எஸ்.ஆர். செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஓ. ஈ. சி நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே கசுவா கிராமத்தில் அமைந்துள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தில் பல நலத்திட்டங்களை துவக்கி வைத்தது.
ஓ. ஈ. சி இந்தியா மென்பொறியியல் துறை இயக்குநர் வசந்த் தயாளன் அவர்களும் மனித வளத்துறை இயக்குநர் ஃபிலிப் அஸ்சே அவர்களும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
ஏறத்தாழ 9 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள, மணிக்கு 500 லிட்டர் செயல் திறன் கொண்ட ஆர். ஓ குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அவர்கள் துவக்கி வைத்தனர். சேவாலயா வளாகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்தில் வசித்து வரும் 250 பயனாளிகள் இதன் மூலம் பயன் பெறுவர்.
மேலும் சேவாலயா வளாகத்தில், 75 மரக்கன்றுகளை ஓ. ஈ. சி இந்தியா நிறுவன பணியாளர்கள் ஆர்வமுடன் நட்டனர். விழாவில் 100 குழந்தைகள் மற்றும் 120 முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெட்டகத்தையும் சிறப்பு விருந்தினர்கள் ஓ. ஈ. சி நிறுவனம் சார்பாக வழங்கினர்.
விழாவில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள், சேவாலயா ஆதரவற்ற மக்களுக்கு செய்யும் சேவை போற்றத்தத்தக்கது என தெரிவித்தனர்.
விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.