Tamil Nadu Animal Husbandry Dept bans 23 dog breeds.

dog ban in tamilnadu
dog ban in tamilnadu

Tamil Nadu Animal Husbandry Dept bans 23 dog breeds.

 06.05.2024 அன்று சென்னையில்‌ 5 வயது சிறுமியை ராட்வீலர்‌ இனவகையைச்‌ சார்ந்த வளர்ப்பு நாய்கள்‌ இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்துவிளைவிக்கும்‌ வகையில்‌ நடந்த ஒரு சம்பவம்‌ மக்களுக்கு மிகுந்தமனவருத்தத்தையும்‌ பீதியையும்‌ ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அரசின்‌ மீன்வளம்‌, கால்நடைபராமரிப்பு மற்றும்‌ பால்வளஅமைச்சகத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ கால்நடை பராமரிப்பு மற்றும்‌ பால்வளத்துறையின்‌நடவடிக்கை மூலம்‌ கால்நடை பராமரிப்பு துறையின்‌ வல்லுநர்கள்‌ மற்றும்‌ துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன்‌ ஏற்படுத்தப்பட்ட குழுவின்‌ பரிந்துரையில்‌ சுமார்‌ 23 வகையான இவளிநாட்டு கலப்பு மற்றும்‌ கலப்பற்ற நாய்‌ இனங்களான,



பிட்புல்‌ டெரியர்‌, தோசா இனு,அமெரிக்கன்‌ ஸ்டப்போர்டு ஷயர்‌ டெரியர்‌, பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா,அமெரிக்கன்‌ புல்‌ டாக்‌, போயர்‌ போயல்‌, கன்கல்‌, சென்ட்ரல்‌ ஆசியன்‌ ஷெபர்டூ டாக்‌,காக்கேஷியன்‌ ஸஷெபர்டு டாக்‌, செளத்‌ ரஷ்யன்‌ வஷெபர்டு டாக்‌, டோன்‌ ஜாக்‌,சர்ப்ளேனினேக்‌, ஜாப்னிஸ்‌ தோசா, அகிதா மேஸ்டிப்‌, ராட்‌ வீலர்ஸ்‌, டெரியர்‌, ரொடீசியன்‌ ரிட்ஜ்பேக்‌, உல்ப்‌ டாக்‌, கேனரியோ அக்பாஸ்‌ டாக்‌, மாஸ்கோ கார்ட்‌ டாக்‌, கேன்கார்சோமற்றும்‌ பேண்டாக்‌ என பொதுவாக அழைக்கப்படும்‌ வகைகள்‌, மிகவும்‌ஆக்ரோஷமானவை எனவும்‌ மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்‌ இனங்கள்‌எனவும்‌ பட்‌டியலிடப்பட்டுள்ளது.

மேற்படி நாய்‌ இனங்கள்‌ மற்றும்‌ அவைகளின்‌ கலப்பினங்கள்‌ இறக்குமதிசெய்வதற்கும்‌, இனப்பெருக்கம்‌ செய்வதற்கும்‌, வளர்ப்பு பிராணிகளாக விற்பனைசெய்வதற்கும்‌ மற்றும்‌ இவைகளின்‌ எல்லா வகை பயன்பாட்டையும்‌ தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களைவைத்திருப்போர்‌ அவற்றை உடனடியாக ஆண்‌ / பெண்‌ கருத்தடை அறுவைசிகிச்சை செய்து இனப்பெருக்கம்‌ செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும்‌.



 நாய்‌ வளர்ப்பவர்‌ நாயை வெளியில்‌ பொது இடங்களுக்கு கூட்டி செல்லும்போதுகட்டாயமாக லீஷ்‌ (இணைப்பு சங்கிலி) மற்றும்‌ தற்காப்பு முகக்வசம்‌ அணிந்துஅழைத்து செல்லவேண்டும்‌. அந்த இணைப்பு சங்கிலியின்‌ அளவானது நாயின்‌மூக்கு நுனியிலிருந்து வால்‌ அடிப்பகுதி முடியும்‌ வரை அதன்‌ உடல்‌ அகலத்திற்குஏற்பவாறு (குறைந்தபட்சம்‌ 3 மடங்கு நீளம்‌) இருக்க வேண்டும்‌. நல்ல தரமானகழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய்‌ உரிமையாளர்கள்‌ தங்கள்‌ செல்லப்‌ பிராணிகளை வெளியே அழைத்துச்‌ செல்வது, செல்லப்‌ பிராணிகளுக்கும்‌,பொதுமக்களுக்கும்‌ பாதுகாப்பாக அமையும்‌.

DOG Banned List

Tosa Inu Fila Brasileiro American Bulldog Kangal Caucasian Shepherd Tornjak, Sarplaninac Mastiffs Terriers Wolf Dogs Akbash Cane Corso Pitbull Terrier American Staffordshire Terrier Dogo AArgentino Boesboel Central Asian Shepherd Dog South Russian Shepherd Dog Japanese Tosa and Akita Rottweiler Rhodesian Ridgeback Canario Moscow Guard Bandog