கோடை விடுமுறை முடிவு பெற்று சேவாலயா பள்ளி திறப்பு
நீண்ட கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டது. 62 நாட்களுக்குப் பிறகு LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அனைத்து மாணவர்களும் சேவாலயா உருவாக காரணமாக இருந்த பாரதியார், காந்தி, விவேகானந்தர் ஆகிய முப்பெரும் தலைவர்களை வணங்கி, உள்ளே நுழைந்தனர்.
குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது வகுப்பறை. அந்த வகுப்பறைக்கு 124 LKG – குழந்தைகள் முதன் முதலாக வருகின்றனர். உள்ளே வரும்போது பலூன்கள், கிரீடம், இனிப்புகள் கொடுக்கப்பட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர்.
குழந்தைகளின் முகத்திலும் பெற்றோர்களின் முகத்திலும் எல்லையற்ற மகிழ்ச்சியை காண முடிந்தது. LKG முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள 2200 மாணவர்களுக்கும் ஆசிரியர்கள், இனிப்புகளையும் சிறிய பரிசுகளையும் கொடுத்து வரவேற்றனர்.