ராமகிருஷ்ண மிஷன் மாணவரில்லம், சென்னை நூற்றாண்டு காணும் `ஏழைகளின் அரண்மணையும்

RAMAKRISHNA MISSION STUDENTS-HOME -CHENNAI

ராமகிருஷ்ண மிஷன் மாணவரில்லம், சென்னை நூற்றாண்டு காணும் `ஏழைகளின் அரண்மணையும்’, `ராமகிருஷ்ண மிஷன் உறைவிடப் பள்ளியும்’ சேவையும் கருணையும்:

எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுவதைப் பற்றி விவரிக்கும் போது, ​​ஸ்ரீ ராமகிருஷ்ணர், `மனிதனுக்கு இரக்க உணர்வுக்கு உரிமை இல்லை,  அடக்கமாக உணர்ந்து, அனைத்து ஜீவ சேவையையும், சிவ சேவையாகவும், மனித குலத்திற்கு செய்யும் சேவையை கடவுளுக்குச் செய்யும் சேவையாகவும் கருத வேண்டும்’ என்றார். இதன் கருத்தாழத்தை சுவாமி விவேகானந்தர் மட்டுமே சரியாக புரிந்து கொண்டார். இறைவன் அருள் இருந்தால் இந்த உயர்ந்த செய்தியை உலகம் முழுக்க பரப்புவேன்!’ என்று மகிழ்ந்தார். ஸ்ரீ சாரதா தேவி கூறுகிறார், “ஒருவரால் மற்றவருக்கு மகிழ்ச்சியை அளிக்க முடிந்தால் மட்டுமே ஒருவரின் வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறும்”.

சுவாமிஜியின் அறைகூவல்:

மேலை நாடுகளின் பயணங்களின் பிறகு தாயகம் திரும்பிய சுவாமிஜி, ஏழைகளின் கஷ்டத்தில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். சுவாமி விவேகானந்தர், “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ போன்ற உபநிடத போதனைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள், உங்கள் தாயை கடவுளாகப் பாருங்கள், உங்கள் தந்தையை கடவுளாகப் பாருங்கள் என்று. ஆனால் நான் “ஏழைகள், படிக்காதவர்கள் மற்றும் துன்பப்படுபவர்களை கடவுளாக காணுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லுகின்றேன் – இனி இவர்கள் உங்கள் கடவுளாக இருக்கட்டும்.

சுவாமிஜி தென்னிந்தியாவில் ஸ்ரீராம்கிருஷ்ண மடத்தின் சேவைகளைத் தொடங்குவதற்கு நியமித்த அவரது சகோதரச் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர், மார்ச் 1897 இல் சென்னை வந்தார். அவர் சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியது மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இயக்கத்தை பரப்புவதற்கும் காரணமாக இருந்தார்.

மாணவர் இல்ல தொடக்கம்

1905 இல், சுவாமி ராமகிருஷ்ணானந்தர் மைசூரில் பிளேக் நோயில் பெற்றோர்களை இழந்த ஒரு கல்லூரி மாணவனைக் கண்டபோது, அவனைத் தன் பொறுப்பில் கவனித்துக் கொண்டார். ராமு என்ற  ராமஸ்வாமி ஐயங்கார் என்ற சீடர் மயிலாப்பூர் குளக்கரையில் பசியோடு, மனமுடைந்து,வாடியிருந்த 4 சிறுவர்களைக் கண்டு மனம் இர்ங்கினார். அவர்கள் தங்குவதற்கும், கல்வி கற்பதற்கும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குண்டூரிலிருந்து (ஆந்திரா) சென்னைக்கு வந்திருந்தனர் ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

எனவே இது போன்ற அனாதை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நிரந்தர ஏற்பாடு செய்ய நினைத்தது ராமுவின் தொண்டு உள்ளம். இவ்வாறு தோன்றியதே ராமகிருஷ்ண மாணவரில்லம். இது 1905 பிப்ரவரி 17 அன்று சுவாமி ராமகிருஷ்ணானந்தரால் தொடங்கி வைக்கப்பட்டது. ராமு கண்ட 4 சிறுவர்கள், சுவாமி ராமகிருஷ்ணானதரின் ஆதரவில் இருந்த மைசூர் மாணவன் மற்றும் சமையல் செய்ய வந்தவரின் 2 மகன்கள் உட்பட 7 மாணவர்களுக்கு குருதேவரின் பூஜைக்குப் பிறகு உணவு அளிக்கப்பட்டது. அக்கணத்திலிருந்து அது அவர்களது `இல்லமாகவே’ ஆயிற்று. அன்று மூட்டபட்ட அடுப்பு இன்றும் எரிகின்றது; குருதேவர் ஸ்ரீராம்கிருஷ்ணரின் அருளால் என்றும் எரியும்!

Dr. நஞ்சுண்ட ராவ் அளித்த கேசவ பெருமாள் தெரு வீட்டில் ஆரம்பித்து, வேறு சில இடங்களில் வாடகைக்கு இருந்த பின், நிலையான சொந்த இடத்தின் அவசியம் உணரப்பட்டது. 1915-ல் ஸ்ரீ S.G.ஸ்ரீனிவாச்சாரிரார் 15 ground- வீட்டு மனையை மிகப் பெரிய தானமாக வழங்கினார். 11 ground மனை ஸ்ரீ K.V.அடிகா என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஆன்மீக புதல்வரும், நேரடிச் சீடருமான சுவாமி ப்ரம்மானந்தர் 06.05.1917, புத்த பூர்ணிமா தினத்தன்று இல்லத்திற்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜையைச் செய்தார்.    .




ஏழைகள் தங்கிப் படிப்பதற்கு கூரைக்குடிசைகள் போதுமே; பெரிய கட்டிடம் தேவை இல்லையே என்று பலர் கூறினர். இருந்தாலும், சுவாமி பிரம்மானந்தரும், ராமுவும், நண்பர்களும், ஏழைகளாயிருந்தாலும், அவர்களில் இறைவனைக் காணும் முயற்சியில், ஒரு பெரிய கல்விக் கோயிலை எழுப்பி, அதில் சரஸ்வதி அம்மனை எழுந்து அருளச் செய்து அர்பணிக்க முடிவெடுத்தனர்.

சுவாமி பிரம்மானந்தரின் ஆசியாலும், ராமு மற்றும் நல்ல உள்ளம் கொண்ட பலரது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் ஒரு பிரம்மாண்ட கட்டிடம் எழுந்தது. 10.05.1921, அக்ஷய திருதியை நன்னாளன்று சுவாமி பிரம்மானந்தர் அவர்களால், கிருஹ பிரவேசம் செய்யப்பட்ட இக்கோயிலை `ஏழைகளின் அரண்மணை’ என்று பொருத்தமாகப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

அப்போதிருந்து, கடந்த 100 ஆண்டுகளில் இல்லம் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. தேவையில் வாடும் எழை,அனாதைச் சிறுவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வழங்குவதைத் தவிர, இந்தியாவின் பாரம்பரிய கலாச்சார பண்புகளையயும், மேற்கின் அறிவியல் அணுகுமுறையையும் இணைத்து தரமான கல்வியை வழங்க பாடுபட்டு வருகிறார்கள். தவிர, தொழில்நுட்பக் கல்வியை வழங்குவது அவசியம் என்று ஆரம்ப காலத்திலேயே கண்டறியப்பட்டது, இதன் மூலம் சிறுவர்கள் தங்கள் படிப்புக்குப் பிறகு பயனுள்ள வேலைவாய்ப்பைக் கண்டறிய முடியும். மாணவர் இல்லம் ராமகிருஷ்ண மிஷனின் கிளை மையமாகும். ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் ஆகியவை உலகம் முழுவதும் உள்ள, அரசியல் சார்பற்ற, சாதிபேதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மீக அமைப்புகளாகும், அவை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு வகையான மனிதாபிமான, சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

`ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச’, “ஒருவரின் சொந்த முக்திக்காகவும்;, உலக நன்மைக்காகவும்” என்பது ராமகிருஷ்ண இரட்டை அமைப்புகளின் குறிக்கோள். இது சுவாமி விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது. ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் உலகம் முழுவதும் 214 (approx) மையங்களைக் கொண்டுள்ளது.

உறைவிட உயர்நிலைப் பள்ளி

1922 இல் தொடங்கப்பட்ட இந்த உயர்நிலைப் பள்ளி சுமார் 250 சிறுவர்களுக்கு 6-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி அளிக்கிறது. பல ஆண்டுகளாக 10ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பாலிடெக்னிக் கல்லூரியில் சேருகின்றனர். கணினி கல்வி, வரைதல் மற்றும் கைவினைப் பொருட்கள், ஹார்மோனியம் & தபேலா, ஹிந்தி மற்றும் பள்ளி இசைக்குழு, கைலாச வாத்தியம், School Band Troupe, Spoken Engish ஆகியவற்றில் சிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

கணித ஆய்வகம், அறிவியல் பூங்கா, ஆக்டிவிட்டி கிளப் நாடகக் குழு ஆகியவை அவர்களின் அறிவையும் திறமையையும் மேம்படுத்துகின்றன. சிறுவர்கள் NCC கடற்படை பிரிவு, ஜூனியர் ரெட் கிராஸ் மற்றும் சாரணர் அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர். நகரில் நடைபெறும் இலக்கிய மற்றும் கலாச்சார மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் அவர்கள் தவறாமல் கலந்துகொண்டு பரிசுகளை வெல்கிறார்கள். அவர்கள் எப்போதாவது ஆய்வுப் பயணங்கள் மற்றும் உல்லாசப் பயணங்களுக்குச் செல்கிறார்கள்.

உறைவிடத் தொழில்நுட்பக் கல்லூரி

தொடக்கத்திலிருந்தே, பொதுக் கல்வி, மெட்ரிகுலேஷன் வரை அல்லது கல்லூரியில் படிப்பது, சிறுவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு அவ்வளவாக உதவவில்லை என்பதை இல்லத்தின் மேலோர் உணர்ந்தனர்.

1925-ஆம் ஆண்டே பிரம்பு, பட்டரை போன்ற தொழில் சார்ந்த பயிற்ச் அளிக்கப் பட்டது.1932 ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சிக்குப் பிறகு சிறுவர்களுக்கு தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்க ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் LAE (ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்) மற்றும் பின்னர் LAE இடத்தில் DME (டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2005 இல்ல நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மேலும் கணினி பொறியியல் டிப்ளமோ மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ இல்ல செலவில்  தொடங்கப்பட்டது. மொத்த மாணவர் எண்ணிக்கை  மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 400.. ஒவ்வொரு ஆண்டும் முதல் ஆண்டில் 120 மாணவர்கள் மற்றும் 12 மாணவர்கள் இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்படுகின்றனர். போதிய அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள்,  கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் மாணவர்களுக்கு கல்வி கற்பித்தலில் சேவையாற்றுகின்றனர்.

பட்டறை மற்றும் ஆய்வகங்கள்

நன்கு அமைக்கப்பட்ட பட்டறை, முதலாம் ஆண்டு மாணவர்களின் பயிற்சி தேவைகளையும், மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் டிப்ளமோ மாணவர்களையும் பூர்த்தி செய்கிறது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தொழில்துறையில் இருந்து CNC இயந்திரங்கள் நிறுவப்பட்டன. ஆட்டோமொபைல் பட்டறையில் ஆட்டோமொபைல் இயந்திரங்களின் பல மாதிரிகள் உள்ளன.

கணினி, வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங் ஆய்வகங்களில், கணினி பொறியியல் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். கணினி மையம் மாணவர்களுக்கு ஆட்டோகேட் மற்றும் கேட்காம் பாடங்களில் பயிற்சி அளிக்கிறது.

மற்ற பொறியியல் பாடங்களுக்கும் எங்களிடம் பல்வேறு ஆய்வகங்கள் உள்ளன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுக்கான நன்கு பொருத்தப்பட்ட ஆய்வகங்களில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இல்லம் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை மேம்படுத்துகிறது.

சிமுலேஷன் மூலம் டிரைவிங், சிசிஎன்ஏ போன்ற சிறப்புப் படிப்புகளில் மாணவர்கள் தங்கள் திறன்களையும் அறிவையும் வளர்த்துக் கொள்கிறார்கள். இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு எனப் பல்வேறு நிலைகளில் பங்கேற்றுப் பல பரிசுகளைப் பெறுகிறார்கள். தொழில்துறை பயிற்சி, தேசிய சேவைத் திட்டம், ரோட்ராக்ட் மற்றும் பலவற்றில் பங்கேற்பது ஊக்குவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

எங்களின் இறுதியாண்டு டிப்ளமோ மாணவர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களால் வேலைக்காக தேர்வு செய்யப்படுறார்கள்..

தொடக்கப் பள்ளி

1936 இல் தொடங்கப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா நூற்றாண்டு தொடக்கப் பள்ளி, உள்ளூர் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி வழங்குகிறது. இந்த தமிழ் வழி  பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள்/மாணவிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது உறைவிடப் பள்ளி அல்ல.

கல்லூரிப் பிரிவு

குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் இல்லத்தில் தங்கி விவேகானந்தா கல்லூரியில் படிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சூரிய வெப்ப நீராவி சமையல் அமைப்பு, சூரிய-காற்று கலப்பின அமைப்பு, தண்ணீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு, சூரிய மின் உற்பத்தி (net metering), பசுமைக் கட்டிடங்களுக்கான IGBC இன் 2-பிளாடினம் தரச்சான்றுகள், போன்றவைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இல்லத்தின் அக்கரையை வெளிப்படுத்துகிறது. இவற்றைப் பற்றி மாணவர்களும் கற்கின்றனர்.

விவேகானந்த- BPCL  திறன் மேம்பாட்டு மையம்

2019-ஆம் ஆண்டு BPCL நிறுவனத்தின் CSR உதவியுடன் 15 கோடி ரூபாய் செலவில் 35600 சதுர அடியில் 3-மாடி கட்டடம், IGBC GREEN BUILDING PLATINUM RATED ஒன்று கட்டப்பட்டது. இதில் அதி நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக உள்ளன. தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிப்பதோடு, தொழில்துறை வல்லுனர்களும் அவ்வப்பொழுது வருகை தந்து மாணவர்களை LATEST TRENDS- களை போதிக்கின்றனர். இதைத் தவிர `Training the trainers’ அருகிலுள்ள பாலிடெக்னிக் விரிவுறையாளர்களுக்கு  பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.

சமையல் தவிர, இல்லதிற்கான பராமரிப்புப் பணிகள் முழுவதையும் மாணவர்களே மேற்கொள்கின்றனர். Dignity of labour, self help-ன் மேன்மை போன்ற நற்பண்புகளை இல்லத்து மாணவர்கள் கற்கின்றனர்.

உணவு, உடை, உறையுள், மருத்துவம், விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் யோகா போன்ற அனைத்து பயிற்சி/ சேவைகளும் மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கப் படுகின்றன.

எங்களது முன்னாள் மாணவர்கள் ஏழைகளுக்கு பல சேவைகளை செய்கின்றனர். இலவச கல்வி மையங்கள், மருத்துவ முகாம்கள், மிகவும் நலிந்தவர்களுக்கு பண உதவி போன்ற தங்களால் இயன்ற சேவையை செய்து வருகின்றனர்.

இல்லத்திற்கு பல பெரியோர்கள் வருகைதந்து வாழ்த்தி இருக்கின்றனர். இதில் அன்னிபெசந்த் 1914; மஹாத்மாகாந்தி 1915; சரோஜினி நாயுடு1917; ராஜாஜி 1917; லார்ட்மற்றும்லேடிவில்லிங்கடன் 1922; டாக்டர்எஸ்.ராதாகிருஷ்ணன் 1930; ஸர். ஜார்ஜ்ஃப்ரெடெரிக்ஸ்டான்லி-ஆளுனர் 1930; ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி மஹாசுவாமிகள், காஞ்சிபுரம்1932;ஜவஹர்லால்நேரு 1936; ஏபிஜேஅப்துல்கலாம் 2005; பரம் வீர் சக்ர திரு.யோகேந்திர சிங் யாதவ்.கார்கில் போர்வீரர்  முதலியவர்கள் அடங்குவர்.

இல்லத்து மாணவர்களில் பலர் நாட்டிற்கு சிறந்த சேவை செய்திருக்கிரார்கள். அவர்களுல் சிலர்:-




சுவாமி சர்வஞானானந்தர் மூத்ததுறவி, ராமகிருஷ்ணமடம்
சுவாமி வந்தனானந்தர் மூத்ததுறவி
Prof.டி.ஆர்.சேஷாத்ரி விஞ்ஞானி – பத்மபூஷன் 1963
ஏ.ஸ்ரீனிவாசன் NLC யின்சிறந்தபொறியாளர்
டி.எம்.பி.மஹாதேவன் பத்மபூஷன் 1967; முனைவர் – அத்வைதம்
Commander வி.எஸ்.பி.முதலியார் Royal Air Force;(U.K.) Indian Air Force;

சிறந்தபொறியாளர்,போர்வீரர்

Maj.Gen. எஸ்.பி.மஹாதேவன் போர்வீரர் –
சீதாராமன் தலைவர், தோஹாவங்கி, கத்தர்

கடந்த 117 ஆண்டுகளாக, தாராள மனப்பான்மையுள்ள பொதுமக்களால், அக்கறையுள்ள மற்றும் சமுதாயத்தை உருவாக்குவதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களால் இந்த இல்லம் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நல்ல பணியைத் தொடரவும், ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பின்தங்கிய குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கவனித்து, நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக அவர்களை உருவாக்கவும், மாணவர் இல்லம் உங்கள் உதவியையும், ஆதரவையும் நாடுகிறது.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்: Website: www.rkmshome.org

RAMAKRISHNA MISSION STUDENTS-HOME -CHENNAI
RAMAKRISHNA MISSION STUDENTS-HOME -CHENNAI

CENTENARY CELEBRATIONS OF THE `PALACE OF THE POOR, THE MAIN BUILDING AND `THE RESIDENTIAL SCHOOL’ OF RAMAKRISHNA MISSION STUDENTS’ HOME, CHENNAI

The Ramakrishna Mission Students’ Home, Mylapore, Chennai is a branch of the world renowned Ramakrishna Math and Ramakrishna Mission Belur Math, Kolkata and is one of its oldest Institutions. As taught by Swami Vivekananda, the Home takes education to the poor, totally free of cost, through its Residential High School and a well equipped Polytechnic College supported by a modern Skill Development Centre with State-of-Art, laboratories and machineries.

THE PALACE FOR THE POOR, is a concrete expression of Shri Ramakrishna’s love for the poor. In the year 1905, Sasi Maharaj blessed Sri C. Ramaswamy Iyengar, (fondly,  Ramu,) thus: “Ramu you have the true spirit and you will always have my love and blessings. Go on sincerely and bravely, never mind; money will come. A great thing will grow out of it surpassing your fondest hope”. Ramu accommodated seven destitute boys in a small  house in Mylapore given by Dr Nanjunda Rao. The Home was formally inaugurated by Sasi Maharaj, on 17th February, 1905, in this building. Sasi Maharaj conducted a worship of Sri Ramakrishna and meditated for a while. The hearth was lit. The boys had their first meal in what became the Ramakrishna Students’ Home from then onwards.

Swami Brahmanandaji, the spiritual son of Shri Ramakrishna, visited Madras In 1908. He came to know intimately about the affairs of the Home.  As the need for a permanent habitat was discussed, Swami Brahmananda would not settle for any shelter short of a palace. Sasi Maharaj used to say, whatever Swami Brahmananda touched became not only pure but also got the purifying power. He inspired Ramu and others with his indomitable faith to undertake any work for a good cause saying that men and money would come automatically and for such noble efforts, His grace would be available in abundance.

The new building was conceived of as temple of learning and not as a charity asylum, not just a place for merely sheltering the poor but to enshrine the Goddess of Wisdom and to serve them at her altar in a spirit of loving worship.

In July 1915, Sri S.G. Srinivasachariar, a District Munsiff, made a generous gift of a valuable building site of 15 grounds in Mylapore to the Home. Another 11 grounds was acquired from one Sri K.V.Adiga. Dewan Bahadur AV Ramalinga Iyer, then Chief Engineer, PWD in the Government of Madras drew up the plans, according to which there were to be 36 rooms. A central hall on the ground floor and a Prayer Hall in the first floor were planned. Each room was to accommodate 3 boys so that the building would provide for 100 boys and their wardens. Even though the strength of the Home was hardly 30 then, with a lot of foresight the authorities planned to build a massive building with ground and first floor. The estimated cost was Rs. 1,07,000/- (Rupees One Lakh and Seven Thousand).

Srimat Swami Brahmanandaji laid the foundation stone for the main building on 6th May 1917 – Vaisaka Poornima day, the birthday of Lord Buddha.




The cost of construction had escalated due to the first world war. However all-round support including assistance from the government helped out the project.

In addition to two rooms, the Maharaja of Bobbili sponsored the “Bobbili Medical Ward” in memory of his son. “Pethachi Prayer Hall” reminds us of the nobility of the Pethachi Chettiar.

Swami Brahmanandaji Maharaj declared open the “Palace for the poor” on Akshaya Tritiya day, 10th May 1921. The Swamiji stayed in the Home for more than a month. He created in the Home an atmosphere of love, peace and spiritual fervour, vibrant with purity and serenity. That the founders could conceive of a “Palace for the poor” is a true testimony as much to their large heartedness as to their vision.

“Ramakrishna Students’ Home became Ramakrishna Mission Students’ Home” in 1918 after the Home was formally affiliated to the Ramakrishna Mission.

The following are the original set of guiding principles for the day to day functioning of the Home:

  1. The boys should get the modern education provided by the Schools and Colleges
  2. They should be provided with knowledge and training in the ancient heritage of India. They should get training in chanting of the Vedas, the Bhagavat Gita and devotional hymns of both Vaishnavite and Saivite traditions
  3. They should attend to all the works of the Home by themselves. Except for a cook no other servant would be employed.
  4. The premises should be kept neat, clean and tidy – the boys should be made to understand the dignity of     labour. All the cleaning works connected with the upkeep of the Home should be carried out by the students themselves.
  5. The accounts should be maintained, both for income and expenditure, scrupulously.

Driven by these core principles, the Institution proudly marches into its second century of glorious Service. For the fuller realisation of the Gurukula ideal, and for the inculcation of the principles of service and sacrifice, a residential school was a want. A separate building was raised and named ‘Nattukkottai Nagaraththar Vidyasala”

In the year 1936, Ramakrishna Centenary Elementary school was started and housed in the staff quarters, just across Home. It serves the local poor children.

In 1932, the Home took up the management of a Middle School in T. Nagar.

In 1938, Sri Sarada Vidyalaya, started by Sister Subbulakshmi Ammal was handed over to Sri Ramakrishna Mission. Later these institutions became separate centres.

 During the second world war the Residential school was shifted to Uthiramerur in 1942 and to Aathur in 1948. The year 1958(?) saw the school back in the Palace for the Poor.

The Industrial School, which became Ramakrishna Mission Technical Institute and now Ramakrishna Mission Polytechnic College, trains students in mechanical, automobile and computer streams. These are also residential courses and a separate hostel was constructed.  The polytechnic college has a new building along with modern workshop and other facilities.

From seven inmates in 1905, the Home has grown to shelter 638 prospective `Maharajas’ in its “Palace for the Poor”, from the residential high school, residential polytechnic college and the college section.

The Gurukula system where the teacher and the taught live in close proximity followed in the Home, has yielded splendid results in shaping the boys.

The blessings of Sri Ramakrishna Paramahamsa, through his direct disciples Swami Ramakrishnananda and Swami Brahmananda and the tireless efforts of Sri Ramaswamy Iyengar, Sri Ramanujachariar and a galaxy of monastic members and others have seeded, sprouted and grown into the large banyan tree, that is the “Palace for the Poor”, as we see it today.

The generous gifts, support and timely help by many distinguished persons and well-wishers need a separate volume to be fully expressed.

Looking back, on a Century of unselfish service from the `Palace of the poor’, the Main buildings of the Home and the Residential High School to empower the poor through quality education and character building the Home humbly feels gratified. Sans any Commercial motive, the Unique Institution has run only on public support for over 125 years since its inception. This reflects greatly on the usefulness of the `Home’ and more admirably on the generosity of the supporters of the noble cause. Centenary of the Main Building and the Residential School is certainly an occasion to rejoice and celebrate!

The old and the present `boys’, staff and management of The Home express their gratitude to all those who had contributed to this mighty institution. We pray to Sri Ramakrishna, for the continued growth and sustenance of this Unique Institution.