புஷ்ப அபிஷேகம்: மலர்களால் பகவானை வழிபடுதல்
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சென்னை ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புஷ்ப அபிஷேக திருவிழா வருகிற மே 12, 2024 அன்று (ஞாயிறு மாலை 6 மணி முதல்) நடைபெற உள்ளது. பக்தர்கள் பகவான் கிருஷ்ணரின் மீதான பக்தியையும் அன்பையும் வெளிப்படுத்துவதற்கு இந்த திருவிழா ஒரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது. பக்தர்கள் பல்வேறு வண்ண மலர்களால் பகவான் கிருஷ்ணருக்கு மலர் அபிஷேகம் செய்வர்.
“பகவான் கிருஷ்ணர் கோபியரின் கைப்பாவையாக இருந்தார், ஒருமுறை கோபியர்கள் பகவான் கிருஷ்ணருக்கு அலங்காரம் செய்ய விரும்பினர். பகவான் கிருஷ்ணரை பல்வேறு ஆடை ஆபரணங்களாலும் வண்ண மலர்களாலும் அலங்கரித்தனர். அந்த விழா, “புஷ்ப அபிஷேகம்” என்று அழைக்கப்படுகிறது.” – ஸ்ரீல பிரபுபாதர், இஸ்கான், ஸ்தாபக ஆச்சாரியர்.
ஹரே கிருஷ்ண கீர்த்தனத்துடன் நடைபெறும் புஷ்ப அபிஷேக திருவிழாவானது, காதிற்கும் கண்ணிற்கும் விருந்தளிக்கும் ரம்யமான திருவிழாவாகும். புஷ்பாபிஷேகத்தை தொடர்ந்து கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாத மலர்கள் பக்தர்களுக்கு பெருமளவில் விநியோகிக்கப்படும்.
பக்தர்கள், கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை ஹரே கிருஷ்ண நாமத்தை பாடி மகிழ்ந்த வண்ணம் ஒருவரின் மீது ஒருவர் தூவி மகிழ்வர். அந்த காட்சியானது காண்பதற்கு பூமழை பொழிவதைப் போன்று இருக்கும். விழா முழுவதும் ஹரே கிருஷ்ண கீர்த்தனம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு, பக்தர்கள்
விருந்தாவனத்தின் பாரம்பரியமிக்க, “ பூலோன் வாலி ஹோலி” திருவிழாவை கொண்டாடி மகிழ்வர்.
நேரடி கவரேஜ் இணைப்பு : https://www.youtube.com/@
நிரல் அட்டவணை
கீர்த்தன் மேளா – காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
சொற்பொழிவு – மாலை 6 மணி
ஆரத்தி – மாலை 6.30 மணி
அபிஷேகம் – இரவு 7 மணி
பிரசாதம் – இரவு 7:45 மணி
விழாவின் இறுதியில் அனைவருக்கும் பக்தி மற்றும் ஆன்மீக நிறை வழங்கும் கிருஷ்ண பிரசாத விநியோகம் நடைபெறும். அனைவரும் விழாவில் கலந்து கொண்டு பகவான் கிருஷ்ணரின் அருளை பெற இஸ்கான் சென்னை அன்புடன் அழைக்கிறது.
Puspha Abhishek: Honouring Divinity Through Flowers
The annual Puspha Abhishek festival at International Society for Krishna Consciousness (ISKCON) Chennai’s Sri Sri Radha Krishna temple is a highly anticipated and spiritually uplifting event that is set to take place on May 12, 2024 (Sunday, 6 pm onwards). This sacred occasion offers devotees a unique opportunity to express their love and devotion towards the divine deities by showering them with flowers of various colours.
“Krishna was just a toy in the hands of the Gopis, so one day the Gopis decided that we shall decorate Him. Pushpa Abhishekam means a ceremony to decorate the deity profusely with flowers, ornaments, cloths.” – Srila Prabhupada (Founder Acharya ISKCON)
Following the ceremonial bath of the deities in this floral tribute, the flowers are generously distributed among the devotees, allowing each participant to partake in the spiritual blessings offered. The devotees then play with these offered flowers and celebrate ecstatic ‘phoolon wali holi’, a tradition with its roots in the holy town of Vrindavana.
The festival concludes with a prasadam feast, fostering a spirit of devotion and spiritual contentment among attendees.
LIVE COVERAGE LINK: https://www.youtube.com/@
Program Schedule
KIRTAN MELA – 9am to 9pm
LECTURE – 6 pm
ARATI – 6.30 pm
ABHISHEK – 7 pm
PRASADAM – 7:45 pm
View this post on Instagram