பிராக்டோ 15 வட்டார மொழிகளில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகளை அறிமுகப்படுகிறது
தரமான மருத்துவ சேவை பெறுதலை மேம்படுத்துவதற்கான அதன் கடமையை மீண்டும் உறுதிப்படுத்தி, இந்த நடவடிக்கையானது உள்ளூர் மொழி வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு பதிலளிக்கும் ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்றுவதை நோக்கம் கொண்டுள்ளது
மக்கள் தொகையில் வெறும் 10% பேர் மட்டுமே ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு நாட்டில், நோயாளி-மருத்துவர் தகவல் தொடர்புகளில் மொழித் தடையை தகர்த்து, அனைவருக்கும் சமமான, தரமான மருத்துவசேவையை எளிதாக்க வேண்டியதன் அவசியத்தை போதுமான அளவு வலியுறுத்த முடியாது. இதை மனதில் கொண்டு இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஹெல்த்கேர் நிறுவனமான பிராக்டோ தனது டெலிஆலோசனை சேவைக்கு வட்டார மொழி விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சியானது, ஆன்லைன் ஆலோசனை பெறவிரும்பும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் பேசக்கூடிய மருத்துவரை தேர்வு செய்யஉதவுகிறது. தற்போது, இந்த சேவையானது இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம் , தெலுங்கு மற்றும் பெங்காலி உட்பட 15 மொழிகளில் வழங்கப்படுகிறது – இன்னும் அதிக மொழிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் 200 மில்லியன் தனிப்பட்ட பயனர்கள் இந்த வசதியை பெறுவதில் இருக்கும் தடைகளை தகர்ப்பதற்கு பிராக்டோ ஒரு படி அருகாமையில் உள்ளது.
ப்ராக்டோவில் மொழி சார்ந்த அம்சங்கள் தொடர்பாக, லட்சக்கணக்கான பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பயனர்கள் தேர்வு செய்வதற்கு ஒரு மாற்று மொழியாக இந்தி உடன் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு முன்னோடித் திட்டமாக இது தொடங்கப்பட்டது,
ஆலோசனைக்கு அவர்களின் விருப்ப மொழி (கள்) ஆக, இந்தி, தமிழ், மராத்தி கன்னடம் மற்றும் தெலுங்கு (இந்த வரிசையில்) உருவாகின்றதுடன் இந்த நேரத்தில், பிராக்டோவில் 25% ஆன்லைன் ஆலோசனைகள் வட்டார மொழிகளில் நடத்தப்பட்டன, சுமார் 67% வட்டார ஆலோசனைகள் மெட்ரோ அல்லாத நகரங்களில் வசிக்கும் பயனர்களிடமிருந்து வந்ததாகும். குறிப்பாக, 65% வட்டார ஆலோசனைகள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயனர்களிடமிருந்து வந்தவையாகும்.
இந்த புதிய முயற்சி குறித்து கருத்து தெரிவித்த, சித்தார்த்தா நிஹலானி, துணைத்தலைவர்- புராடக்ட் வளர்ச்சி, பிராக்டோ, ” அனைவரும் சமமாக தரமான மருத்துவ சேவையைப் பெறுதல் எனும் ஒன்றையை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ப்ராக்டோ கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு பயனர்களுக்கு ஏற்ற புராடக்ட்டுகளை உருவாக்குவதில் அர்ப்பணித்துள்ளது. இது புதிய புராடக்ட்டுகள் மற்றும் பழைய புரடக்ட்டுகளில் அதிக அடுக்குகளுக்கு வழிவகுத்துள்ளது. ஆன்லைன் ஆலோசனைகளுக்கு தங்களது தாய்மொழிகளில் பேசுவதை செயல்படுத்துவதில் – சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து தரப்பிலிருந்தும் வரவேற்ப்பைப் பெறுகிறது – தரமான மருத்துவ சேவையை பெறுதலை கட்டமைப்பதற்கான எங்கள் நோக்கத்தை நிஜமாக்குவதில் ஒரு படி அருகாமையில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.
10 புதிய இணைய பயனர்களில் 9 பேர் இந்தியாவில் உள்ள 10 இணைய பயனர்களில் 9 பேர் தாய்மொழிமொழி பேசுபவர்களாக உள்ளனர், இது போன்ற ஒரு முயற்சி இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் ஹெல்த்கேர் சுற்றுச்சூழலில் மொழித் தடைகளைக் கடக்கவும் டிஜிட்டல் வேறுபாட்டைக் கடக்கவும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
வட்டார மொழி உதவி அம்சம் இப்போது பிராக்டோ ஆப் மற்றும் வலைத்தளத்தில் கிடைக்கிறது. நிறுவனமானது மருத்துவர்-நோயாளிக்கு இடையே நடைபெறும் பேச்சு வார்த்தைகள் தடையற்றதாகவும் ஒரு ஈடுபாட்டுடனும் இருப்பதற்கு புதிய இன்டர்ஃபேஸ் திறன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிராக்டோ பற்றி:
பிராக்டோ, நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாகும், குறிப்பாக இறுதிபயனர்கள் உட்பட, அனைவருக்கும் சிறந்த தரமான மற்றும் சேவையை உருவாக்க, நோயாளிகள், மருத்துவர்கள், கிளினிக்குகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் பரிசோதனைகள் உட்பட ஒட்டுமொத்த மருத்துவ சேவை சுற்றுச்சூழல் முழுவதையும் ஒன்றிணைக்கிறது சரியான மருத்துவர்களைக் கண்டுபிடித்து, முன்பதிவு செய்வது, 60 நொடிகளுக்கும் குறைவாக ETA உடன் ஆன்லைனில் ஆலோசனை பெறுவது, வீட்டிலிருந்தபடியே மருந்துகளைப் பெறுதல் மற்றும் ஆய்வக சோதனைகள் மேற்கொள்வது, சிறந்த மருத்துவர்கள் எழுதிய ஆரோக்கிய கட்டுரைகளைப் பெறுதல் என அவர்கள் எவ்வித இடையூறும் இல்லாத அனுபவத்தைப் பெறுவதற்கு, இது நோயாளிகளின் ஆரோக்கிய பராமரிப்பு பயணத்தின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்கிறது, பிராக்டோ, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த மற்றும் உயர் தரமான மருத்துவ சேவையை வழங்கவும் டிஜிட்டல் மயமாக்கவும் – சிறிய கிளினிக்குகள் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை மருத்துவ சேவை வழங்குநர்களுக்கு உதவும் மென்பொருள் தயாரிப்புகளையும் உருவாக்குகிறது –
தொழில்நுட்பம் மருத்துவ சேவையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறும் போது, அனைத்து மருத்துவத் தரவுகளையும் நிர்வகிப்பது மற்றும் பாதுகாப்பாக சேமிப்பது ஆகியவற்றின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ள மருத்துவர்களுக்கு உதவுவதற்கு ப்ராக்டோ ஒரு அத்தியாவசிய செயலாக்கமாக மாறிவிட்டது. பிராக்டோ 256 பிட் குறியாக்கத்துடன் அனைத்து தரவையும் குறியாக்கம் செய்து, HIPAA இணக்கமான தரவு மையங்களைப் பயன்படுத்துகிறது, மேலும் ISO 27001 சான்றளிக்கப்பட்ட ஒரு சில மருத்துவ சேவை நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். பிராக்டோ 20+ நாடுகளில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம்+ சரியான மருத்துவர் பார்ட்னர்களுடன் இணைப்பதன் மூலம் 18 கோடிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு உதவுகிறது.