3 MONTHS OLD NEWBORN RECOVERS FROM SUCCESSFUL SURGERY FOR HYPOGLYCEMIA

3 MONTHS OLD NEWBORN RECOVERS FROM SUCCESSFUL SURGERY FOR HYPOGLYCEMIA
3 MONTHS OLD NEWBORN RECOVERS FROM SUCCESSFUL SURGERY FOR HYPOGLYCEMIA

இரத்த சர்க்கரை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 3 மாதக் குழந்தைக்கு கணைய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்தது, டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை மருத்துவர் குழு!

பிறந்த குழந்தையின் இரத்தத்தில் சர்க்கரை குறைபாடு இருந்ததால் ஏற்பட்ட பிரச்சனையைச் சமாளிக்க, சென்னையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் (Dr. Kamakshi Memorial Hospitals) நடத்தப்பட்ட அரிதான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பிறந்து 100 நாட்களே ஆன அந்த கைக்குழந்தைக்கு தவிர்க்க இயலாத நிலையில், இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றது. மனித உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரப்பு, தாறுமாறாக இருந்தால், இவ்வித பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

கண்ணன் மற்றும் நிவிதா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு அழகிய பெண் குழந்தை சில மாதங்களுக்கு முன்பு பிறந்தது. ஆயினும் அவளது பிறப்பை முழு மனதுடன் கொண்டாட முடியாத சூழ்நிலை அவர்களுக்கு நேர்ந்தது. குழந்தை பிறந்த 4 மணி நேரத்திலேயே அதன் உடலில் நீலம் பரவுவதை நர்ஸ் கவனித்துள்ளார். குழந்தையின் உடல் இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத நிலையை உணர்த்தும் இந்த மாற்றம் குறித்து உடனடியாக தீவிர கவனம் செலுத்தப்பட்டது. அதோடு, குழந்தை சுவாசிப்பதிலும் கடும் சிரமம் இருந்ததும் தெரிய வந்தது. அதனால், அக்குழந்தை உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடனடி சிகிச்சை தொடங்கப்பட்டது. இதனால், அந்த நேரத்தில் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தாலும், பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க முடியவில்லை.




அதனால், பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் வைத்தீஸ்வரன் அவர்களது ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் குழந்தைக்கு குழாய் மூலம் தேவையான குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இருந்தாலும், இரத்த சர்க்கரை அளவில் பெரிய அளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, ஆரம்பத்தில் இருந்த குளுக்கோஸ் அளவு – ஒரு கிலோ உடல் எடைக்கு, 1 நிமிடத்திற்கு 6 மில்லிகிராம் என்ற அளவு 8 மில்லி  கிராம்… பின்னர் 10 மில்லி கிராம்… என அதிகரித்து கடைசியாக 12 மில்லி கிராம் வரை உயர்த்தப்பட்டது. குழந்தையின் உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் தாறுமாறாக ஏற்றம் காணும் குறைபாடு இருப்பது மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய பாதிப்பு குறித்தும், அதற்கான சிகிச்சை குறித்தும் பேசிய மருத்துவர் வைத்தீஸ்வரன், “தாறுமாறான இன்சுலின் சுரப்பின் காரணமாக, பிறந்த குழந்தைக்கு ஏற்படும் இதுபோன்ற கோளாறுகள் மிக அரிதானவை. ஆனால், தற்போது குழந்தையின் உடல் ரத்தத்தில் ஏற்படும் குளுக்கோஸ் குறைபாட்டிற்கான காரணங்களில் இதுவே மிக முக்கியமானது. இதை முன்னதாகவே அடையாளம் கண்டு, உடனடியாக சிகிச்சை அளிக்கத் தொடங்கினால், அந்தக் குழந்தைக்கு பின்னாளில் பாதிப்புகளைத் தரவல்ல நரம்பு தொடர்பான சிக்கல்களையும் நம்மால் தவிர்க்க இயலும். மாறாக, இந்த நிலையைச் சரிசெய்து முன்னேற்ற இயலாமல் போனால், அது மனநிலை பாதிப்பு, மூளையின் சராசரி செயல்பாட்டில் பிரச்சனை போன்றவற்றை உருவாக்குவதுடன், உயிரிழப்புக்கும் காரணமாகிவிடக் கூடும்” எனத் தெரிவித்தார்.

பூவுலகைக் காணப் பிறந்த அக்குழந்தையை, அடுத்த 100 நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்து, அதன் குளுக்கோஸ், அதாவது இரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து மருத்துவர் குழு கண்காணித்து வந்தது. அதோடு, தொடர்புள்ள மற்ற முக்கிய அவயங்களின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்பட்டன. மரபணு ஆய்வில் தொடங்கி, உடலின் பல்வேறு நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகள் வரை… தேவையான அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. தற்போதைய பாதிப்புகளைச் சீரமைக்க எவ்விதமான மருந்துப் பொருட்களை… அல்லது, ஸ்டீராயிட் உள்ளிட்ட பிற வகை இரசாயனக் கலவைகளைப் பயன்படுத்துவது என, பல்வேறு பரிசோதனை முயற்சிகளும் நடத்தப்பட்டன. DOTA NOC Scan எனக் குறிப்பிடப்படும் சிறப்பு வகை – மனித உடலின் உள்ளுறுப்புகளை… அதன் செயல்பாடுகளை படம் பிடிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மற்ற பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் குழந்தையின் கணையத்தில் உள்ள – அசாதாரண பீட்டா வகை உயிரணுக்கள் அங்கு உற்பத்தியாகும் இன்சுலின் திரவத்தின் அளவை தொடர்ந்து அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து நடந்த ஆய்வுகளின்படி, குழந்தையின் கணையத்தை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக நீக்குவது ஒன்றுதான் தீர்வு என முடிவு செய்யப்பட்டது. குழந்தையின் உயிரைக் காப்பாற்ற விரும்பினால், மாற்று வழிகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. பிறந்த குழந்தைக்கு ஏற்பட்ட இந்தக் கோளாறால், அது சந்தித்து வரும் உடல் உபாதைகளைக் கண்டே மனதளவில் நொந்து போயிருந்த அக்குழந்தையின் பெற்றோர், இந்த அறுவை சிகிச்சையின் தீவிரத்தை குழந்தை தாங்குமா என்ற அச்சப்பட்டனர். ஆனால், தொடர்ந்து அதிகரித்த இரத்தச் சர்க்கரை குறைபாடு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை மட்டுமின்றி, அவசரத்தையும் சேர்த்தே உணர்த்தியது.

தொடர்ந்து நீடித்த இந்தப் பிரச்சனையால், இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவது, அதனால், ஏற்படும் மற்ற பாதிப்புகள் என சிக்கல்கள் மற்ற பல வடிவங்களை எடுப்பதைத் தவிர்க்க செயற்கை சுவாசம் அளிக்கும் முயற்சியும் இருமுறை நடைபெற்றன. தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மருந்துகளும், செயற்கையாக வெளியில் இருந்து குழாய் மூலம் செலுத்தப்படும் குளுக்கோஸூம் போதுமானதாக இல்லை என்பதோடு, அவை நிரந்தர பலனைத் தராது என்பதை உணர்ந்த பெற்றோர், அதன்பின் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புதல் தந்தனர்.

அதையொட்டி, குழந்தையின் கணையத்தை முழுமையாக வெட்டி நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மூர்த்தி தலைமையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது. இத்தகைய சிகிச்சையை…, அதுவும் பிறந்த குழந்தைக்கு மேற்கொள்வது அத்தனை எளிதானதல்ல. மிகத் துல்லியமாக, சிறிதும் பிசகின்றி நடைபெற வேண்டும். அவ்வாறே அனைத்தும் நல்லபடியாக முடிக்கப்பட்டதால், தற்போது அக்குழந்தை மற்ற குழந்தைகளைப் போன்ற, இயல்பு வாழ்க்கையை நோக்கி பயணத்தைத் தொடங்கியுள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர், நன்றி பெருக்குடன், மருத்துவக் குழுவினரைப் பாராட்டி, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு, நலம்பெற்ற குழந்தையுடன் தற்போது வீடு திரும்பியுள்ளனர்.




கிட்டத்தட்ட 100 நாட்கள் தொடர்ந்த கடும் தவம் போன்ற இந்தச் சிகிச்சை காலத்தைப் பற்றியும், வெற்றிகரமான அறுவை சிகிச்சை குறித்தும் கருத்துத் தெரிவித்த மருத்துவர் வைத்தீஸ்வரன், “அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நல்ல உடல்நலத்தோடு உள்ளது. முன்பு காணப்பட்ட இரத்த சர்க்கரை குறைபாடு பிரச்னை இப்போது முற்றிலும் இல்லை. குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து அக்குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் இதை உறுதி செய்தன. அதோடு, அனைத்தும் இயல்பு நிலையில் இருந்து குழந்தை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தன. இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், குழந்தைக்கு பின்னாளில் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை. மற்ற எல்லாக் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியைப் போன்றே இக்குழந்தையின் வளர்ச்சியும் இருக்கும். எனினும், தற்போதைய நிலையில், மாதத்திற்கு ஒருமுறை அக்குழந்தையைப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. பொதுவாக குழந்தைகளிடையே காணப்படும் இயல்பான வளர்ச்சி வேகமும், பிற உடல் ரீதியான மாற்றங்களும், இக்குழந்தையிடமும் ஏற்படுவதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டியுள்ளது.”

“பின்னாளிலும், சிறு வயதிலேயே இக்குழந்தைக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டால், அதை எளிதாகக் கட்டுப்படுத்திவிடலாம். இக்குழந்தையின் அரிய பிரச்னையில் இருந்து வெற்றிகரமாக மீண்டு, நீண்ட நாட்களுக்கு அமைதியான, ஆரோக்கியமான வாழ்க்கை மேற்கொள்ள உதவிட முடிந்ததற்கு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்” எனவும் தெரிவித்தார்.

 

3 MONTHS OLD NEWBORN RECOVERS FROM SUCCESSFUL SURGERY FOR HYPOGLYCEMIA

A new born infant went through a one-of-its kind surgery in the neonatal unit of Dr.Kamakshi Memorial Hospital and has recovered fully. After 100 days of intensive care,the newborn had to be taken in for surgery for Persistent Hyperinsulinemic Hypoglycemia.

Kannan and Nivitha were blessed with a lovely baby girl earlier this year. However, their joy was short-lived. Four hours after birth, the attending nurse noticed that the newborn had turned blue from lack of oxygen. The neonate had stopped breathing and was immediately rushed to the Neonatal ICU at the hospital. She was revived but the situation was quite dire when she was tested with hypoglycemia or extremely low blood sugar levels. The NICU staff headed by Dr. Vaideeswaran (Consultant Neonatologist) started her off on IV glucose but the newborn’s sugar levels remained dangerously low. Glucose Infusion Rate was raised from 6 to 8 mg/kg/min, then 10 mg/kg/min and finally 12 mg/kg/min. With insulin levels soaring she was diagnosed with Persistent Hyperinsulinemic Hypoglycemia.

Explains Dr.Vaideeswaran, “Persistent hyperinsulinemic hypoglycemia in a neonate is relatively rare. Immediate treatment is absolutely necessary in order to save the child from long lasting severe neurological damage. If the situation does not improve it could lead to mental or psychomotor retardation and even prove life-threatening”

The new born remained in the NICU for 100 days where her glucose levels and other vitals were constantly monitored. Understanding that every minute counts, the team of doctors at the hospital embarked on an investigative route to find the best suited treatment modality – genetic analysis, endocrine work-up and trials with Hydrocortisone, Diazoxide and Octreotide. The DOTA NOC scan that was conducted revealed Diffuse Nesidioblastosis which is characterized by excessive insulin production by pancreatic beta cells that have an abnormal microscopic appearance. This diagnosis indicated that the only way to save the baby was Total Pancreatectomy. The parents who were already in a state of emotional trauma, had misgivings on the impact of surgery on their newborn and if she would survive it. Multiple hypoglycemic episodes indicated the urgent need for surgery. The newborn’s condition worsened and she needed to be ventilated twice for Aspiration Pneumonia and Pericardial Effusion. Realising that the drugs and the IV glucose was not giving satisfactory responses, the parents finally consented to surgery.

Dr. Kamakshi Memorial Hospital’s Paediatric Surgeon Dr. Moorthy headed the surgery, and a Total Pancreatectomy was performed on the three month old baby. This kind of procedure on an infant involves high risk and needs to be conducted with absolute precision. The surgery was a complete success and when she was finally discharged, she was well on her way to recovery. The parents were more than happy to show their gratitude to the doctors and staff at Dr. Kamakshi Memorial Hospital who left no stone unturned to save their baby with a token of love.




Speaking about the 100-day long treatment and the successful surgery, Dr. Vaideeswaran says: “After the procedure, the baby is doing fine. She has not had any hypoglycemic episodes and her periodic check-ups have also shown that she is in good health now. Surgery was the only option to ensure she did not sustain a neurological damage that would impede her growth and development. She does need to come in for monthly check-ups because we need to ensure she is achieving developmental milestones and monitoring her sugar levels is a long-term requirement. If at all she develops diabetes in childhood, it can definitely be managed. We are happy to have been able to help her battle this condition and come out healthy.”

Dr. Kamakshi Memorial Hospital:

Dr. Kamakshi Memorial Hospital was established in 2005 by Dr.TG Govindarajan, Founder and Chairman. It is a 75000 square feet 300 bedded multi-specialty hospital at Pallikaranai, Chennai. The hospital is fully equipped with state-of-the-art facilities and expert doctors in every department besides 24/7 emergency services, pharmacy, online consultation, high tech diagnostic and imaging facilities, fully sanitized premises and a support staff that does not hesitate to go the extra mile. The mission of the hospital is to provide quality health care to everyone and it strongly stands by the same.