Maarghazhi Music Competition 2022

Maarghazhi Music Competition
Maarghazhi Music Competition

Maarghazhi Music Competition 2022

CENTRE FOR HINDU ONENESS, Ashok Nagar, Chennai, soon to be launched Tamil News Satellite TV Channel with Hindu Centric conducting this year’s Maarghazhi month music program, a multiplatform music competition for music lovers, which is for the first time in the field of music as ‘CHO TV Maarghazhi Music Competition 2022 – LIVE SABHA’ from December 16th. The performance is conducted daily in the studio hall of their television office and get telecasted as a live program.

It is a great opportunity for music students and enthusiasts to participate in the following categories and showcase their talent on live television.




  • 1) Children (7-12 years)
  • 2) Students (12-17 years)
  • 3) Younger age group (17-22 years)
  • 4) Middle-aged (from 22 years)
  • 5) Above 50 years of age
  • 6) Persons with disabilities (all ages)

They conduct music competitions separately for everyone and give equal opportunities to everyone. They can share their competitive talents by choosing one or more from the below.

  • Vocal Music
  • Instrumental music
  • Classical music from Feature Films
  • Divine Spiritual Songs
  • Patriotic songs

They have designed these competitions to include everyone who is interested in music and bring a challenging musical experience in the history of Tamil television music competition as a daily live broadcast program to music lovers.

The first prize of Rs.25,000/-, the second prize of Rs.15,000/- and the third prize of Rs.7,500/- will be awarded to the winners of the music program.

These three prizes are awarded to a total of 18 winners with certificates as First, Second and Third Prizes for each category (1 – 6) mentioned above.

The final of the competition program is judged by famous music scholars and the audience participates in large numbers as an indoor stage performance.

The entry fee for those who wish to participate in this music competition is Rs.5,000/- and a maximum of six musicians can participate in the competition as Team. And if a person wants to participate in more than one competition, they can participate in a maximum of three competitions to showcase their skills.

In addition, the first prize of Rs.25,000/-, the second prize of Rs.15,000/- and the third prize of Rs.7,500/- will be given to the music schools with students who have demonstrated overall talent as an honor to the music schools. This requires a minimum of ten student groups to compete on behalf of the music school.

This  ‘CHO TV Maarghazhi Music Competition 2022 – LIVE SABHA’ will surely give us a musical delight for the music lovers who missed the Maarghazhi month concerts due to Corona virus in 2020 and 2021.

For more information about the music competition, contact the Founder of the Centre for Hindu Oneness, V. Premsagar, Ph: 9962671188 / 9962672244.




சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் ஹிந்துக்கள் ஒருங்கிணைப்பு மையம் சார்பில் விரைவில் ஹிந்துக்களின் தர்மத்தினை அடிப்படையாகக் கொண்டு துவக்கப்பட இருக்கின்ற தமிழ் செய்திச் செயற்கைக்கோள் தொலைக்காட்சிக்காக இவ்வருட மார்கழி மாத இசை நிகழ்ச்சியினை முதன்முறையாக ‘CHO TV மார்கழி இசைப் போட்டி 2022 – LIVE SABHA’ எனும் தலைப்பில் இசை ஆர்வத்தினருக்கான பன்முக இசைப்போட்டியினை வருகின்ற டிசம்பர் 16ந் தேதி முதல் மார்கழி மாதம் முழுவதும் தினந்தோறும் தங்களது தொலைக்காட்சி அலுவலகத்தின் ஸ்டுடியோ அரங்கத்தில் நடத்த இருக்கின்றனர்.

இதில் கீழ்க்கண்ட பிரிவுகளில் இசை மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பங்கேற்று தொலைக்காட்சியின் நேரலை ஒளிபரப்பில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஓர் நல் வாய்ப்பு.

  • 1) குழந்தைகள்(7-12 வயது)
  • 2) மாணவப் பருவத்தினர்(12-17 வயது)
  • 3) இளைய வயதினர்(17-22 வயது)
  • 4) நடுத்தர வயதினர்(22 வயது முதல்)
  • 5) 50 வயதுக்கு மேற்பட்டோர்
  • 6) மாற்றுத்திறனாளிகள்(எல்லா வயதினரும்)

என அனைவருக்கும் தனித்தனியாக இசைப் போட்டியினை நடத்தி எல்லோருக்குமான சமவாய்ப்புகளை தருகின்றனர். அவர்கள் தங்களது போட்டித் திறைமைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் நன்கு பயிற்சியுள்ள பிரிவுகளில் ஒன்றினைத் தேர்வு செய்து பங்கெடுக்கலாம்.

  • வாய்பாட்டு
  • வாத்திய இசை
  • திரையிசையில் சாஸ்திரிய இசை
  • தெய்வீக ஆன்மீகப் பாடல்கள்
  • தேசபக்திப் பாடல்கள்

என்று இசை ஆர்வம் உள்ள ஒவ்வொருவரையும் உள்ளடக்கி தமிழ் தொலைக்காட்சி இசைப் போட்டி வரலாற்றில் ஒரு சவாலான இசையனுபவத்தினை தினந்தோறும் நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சியாக கலாரசிகர்களுக்கு இல்லம் தேடியும் உள்ளங்கைகளிலும் கொண்டு சேர்த்திட இப்போட்டிகளை வடிவமைத்துள்ளனர்.

இப்போட்டி இசை நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு முறையே முதல் பரிசாக ரூ.25,000/-, இரண்டாம் பரிசாக ரூ.15,000/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.7,500/- வழங்கப்பட இருக்கின்றது.

இம்மூன்று பரிசுகளும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிற்கும் (1 – 6) முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் என மொத்தம் 18 வெற்றியாளர்களுக்கு சான்றிதழுடன் வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர்.

இப்போட்டி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியானது பிரபல சங்கீத வித்வான்கள் நடுவராகப் பங்கேற்று உள் அரங்க நிகழ்ச்சியாக பார்வையாளர்கள் பெருவாரியாக கலந்து கொள்ள இருப்பது இம்மார்கழி நேரலை இசைப் போட்டியின் தனிச் சிறப்பென்றால் மிகையாகாது.




இந்த இசைப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.5,000/- மற்றும் அதிக பட்சமாக ஆறு இசைக்கலைஞர்கள் இணைந்து போட்டியில் பங்கேற்கலாம். மேலும் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றிட விரும்பினால் அதிகபட்சம் மூன்று போட்டிகள் பங்கேற்று தங்கள் திறமைதனை வெளிப்படுத்திட வாய்ப்பினைத் தருகின்றனர்.

கூடுதல் சிறப்பாக, இசைப்பள்ளிகளை கெளரவிக்கும் விதமாக ஒட்டு மொத்த திறமைகளை வெளிப்படுத்திடும் மாணாக்கர்களைக் கொண்ட இசைப்பள்ளிகளுக்கும் முறையே  முதல் பரிசாக ரூ.25,000/-, இரண்டாம் பரிசாக ரூ.15,000/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.7,500/- வழங்கப்படுவது இசைப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் உற்சாகத்தினையும் ஆர்வத்தினையும் தருமென்பதில் இருவேறு கருத்தில்லை. இதற்கு இசைப்பள்ளியின் சார்பாக குறைந்த பட்சம் பத்து மாணவர் குழுவினர் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் கொரோணா நோய்த் தொற்றின் காரணமாக மார்கழி மாத இசை நிகழ்ச்சிகளை தவறவிட்ட இசைப்பிரியர்களுக்கு ஓர் இசைப்பேரானந்தத்தை இந்த தொலைக்காட்சியின் ‘CHO TV மார்கழி இசைப் போட்டி 2022 – LIVE SABHA’ நிச்சயம் நமக்குத் தரும்.

இம்மார்கழி மாத இசைப்போட்டியினைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஹிந்துக்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் நிறுவனர் நடுவை வெ. பிரேம்சாகர் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 9962671188 / 9962672244.