ஆராய்ச்சியில் பல்துறைகளின் தற்கால வளர்ச்சி
தாம்பரம் – வேளச்சேரி நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணைக்கு அருகிலுள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் பல்துறைகளின் தற்கால வளர்ச்சி என்னும் தலைப்பில் இன்று (12.10.2019) பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் தொடக்க விழா நிகழ்விற்கு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு வளர்ச்சிக்கழக சர்வதேச ஆலோசகர் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் மூத்த ஆலோசகருமான முனைவர் S. வெங்கட்ரமணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் உலக நாடுகள் அனைத்தும் கல்வியில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர் என்றும் அதனைப் போன்று பல்துறை ஆய்விலும் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட வேண்டும் என்றும் தற்கால ஆய்வுலகின் இன்றியமையாமையைக் குறித்தும் சிறப்புரை நல்கினார். தாய்லாந்தைச் சார்ந்த டெல்லி உச்சி மாநாடு வாகன இருக்கை தொழில் நிறுவன பொது மேலாளர் திரு. சையந் சவனாசாய் அவர்கள் கலந்துகொண்டு, அவர் பழங்காலத்தில் இருந்ததைவிட தற்காலத்தில் தொழில் நுட்பகருவிகளின் வளர்ச்சியினால் எளிமையாக ஆய்வை நிகழ்த்த முடியும் எனவும் எனவே அனைவரும் ஆய்வுலகில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணரும் அடையார் புற்று நோய் நிறுவன துணைப்பேராசிரியருமான டாக்டர் பிரியா ராமநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.
உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் எனச் சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு 150 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் ஆய்வாளர்கள் சமர்பித்த கட்டுரைகள் அறிவியல், மேலாண்மை மற்றும் மொழிகள் என்னும் வகைப்பாட்டில் மூன்று தொகுதிகளோடு குறுந்தகடும் வெளியிடப்பட்டன. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு காக்னிசண்ட் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் எம்.சி.சி.ஐயின் தலைவருமான திரு. ராம்குமார் ராமமூர்த்தி, துபாய் வோல்லாகாங் பல்கலைக்கழக வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் முனைவர் ப்ளவி லசரடா, சென்னை எரிக்சன் இந்திய குளோபல் சர்வீஸுன் உற்பத்தியின் வளர்ச்சித் தலைவர் திரு. ராகவன்ஹரிதர் ஆகியோரும் கலந்துகொண்டு நிறைவுரை வழங்கினார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினரும் கல்லூரி முதல்வருமான முனைவர் சு.ராமநாதன் அவர்கள் இப்பன்னாட்டுக் கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு ஆசான் நினைவு கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் E.K. புருஷோத்தமன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆசான் நினைவு வணிகவியல் மேலாண்மை நிறுவன இயக்குநர் முனைவர் T. S. சாந்தி, கல்லூரித் துணைமுதல்வர் பேராசிரியர் கோ. ரவிசந்திரன், கல்லூரி சுழற்சி இரண்டு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் T. ஆரியமாலா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர். கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆராய்ச்சித் துறைத்தலைவர் முனைவர் ச. கனிமொழி, வணிகக் கூட்டாண்மை செயலரியல் துறைத்தலைவர் முனைவர் வெ. சாருலதா, வணிக கணினிப் பயன்பாட்டுத் துறைத்தலைவர் முனைவர் தீ. பாஸ்கர் ஆகியோர் இப்பன்னாட்டுக் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்கள்.
International Conference at Asan Memorial College
An International Conference on Contemporary Praxis in Academics & Research: A Multidisciplinary Approach was held on 12th October 2019 at Asan Memorial College of Arts & Science, Jaladampet. The event was inaugurated by the Chief Guest, Dr.S. Venkatramanan, Senior Consultant, UNESCO International Consultant, Asian Development Bank. He spoke on the significance of contemporary research and the need for multidisciplinary approach to research today. The Guest of Honour was Dr. Chaiyant Savanachai, General Manager, Operations, Summit Auto Seats India Pvt. Ltd.,Chennai, who gave an engaging speech explaining how education has become easier in this rapidly changing world, thanks to the Digital Revolution.
The first technical session was handled by Dr. R.S. Ramaratnam, Associate Professor of Management Studies, SCSVMV University, Kanchipuram, who spoke on “Contemporary Balancing of Academics and Research in Higher Education”. The second technical session was chaired by Dr. Priya Ramanathan, Associate Professor, Department of Radiation Oncology, Cancer Institute. She spoke on the topic “Scientific Research – Borrowing Skills from the Manager’s Kitty”.
Over 200 participants took part in the conference. About 150 papers were presented by professors and research scholars from various academic institutions from all over India. The conference proceedings were published in three volumes of edited anthology with ISBN for the three disciplines- Languages, Management and Sciences. The copies of the publication were released on the day of the conference.
The Valedictory address was delivered by Mr. Ramkumar Ramamoorthy, Chairman and Managing Director, Cognizant India & President of MCCI. The Guests of Honour were Dr. Flevy Lasrado, Discipline Leader, Faculty of Business, University of Wollongong, Dubai and Mr. Raghavan Sridhar, Product Development Leader, Ericsson India Global Services, Chennai.
This event was presided over by Dr. E.K. Purushothaman, Vice Chairman of College Management Committee. Dr. S. Ramanathan, Principal & Member-Syndicate, University of Madras welcomed the gathering. The objective of the conference was explained by Dr. T.S. Santhi, Director, Asan Institute of Management and Mr. Ravichandran, Vice Principal and Dr. T. Aryamala, Coodinator, Shift -II moderated the technical sessions. This conference was organized by Dr. S. Kanimozhi, Associate Professor & Head, Department of Microbiology, Dr.D. Baskar Associate Professor & Head, Department of Commerce (Computer Applications) and Dr. V. Charulatha, Associate Professor & Head, Department of Corporate Secretaryship. The event was a grand success.