வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை 17 படுக்கைகள் கொண்ட பல்துறை புதிய தீவிர சிகிச்சைப் பிரிவைத் தொடங்கியுள்ளது

Thiru Ma Subramanian and Venkata Phanidhar Nelluri inaugurate
Thiru Ma Subramanian and Venkata Phanidhar Nelluri inaugurate

 Fortis Hospital, Vadapalani opens new 17 bedded Multi-Disciplinary Intensive Care Unit

– New Intensive Care Unit was inaugurated by the Hon’ble Minister for Health and Family Welfare, Govt. of Tamil Nadu Thiru Ma. Subramanian

In a continuous effort to bring quality healthcare to all patients, Fortis Hospital Vadapalani has inaugurated a state-of-the-art 17 bedded Multi-Disciplinary Intensive Care Unit today.  The new facility is equipped with advanced technologies and round-the-clock multi-disciplinary specialists aimed to offer a high level of intensive care to critically ill patients. This will be an additional unit to the existing 58 ICUs at the center. The ICU was inaugurated by Hon’ble Minister for Health and Family Welfare, Government of Tamilnadu – Thiru. Ma. Subramanian, who also shared an insight into the growing need for advanced healthcare services and the various initiatives from the government to support the same. Thiru. Venkat Phanidhar Nelluri, SBU Head at Fortis Hospital Vadapalani, and Senior Medical personnel were also present at the launch.




Ma Subramanian hands over a fruit basket to ICU patient
Ma Subramanian hands over a fruit basket to ICU patient

Multidisciplinary staff members like Cardiologists, Orthopedics, Neurologists, Pulmonologists, Gastroenterologists, and Hepatologists will provide continuous support in the intensive care unit to treat those who have undergone complex surgeries involving bones and organs.

Speaking during the launch Mr. Venkat Phanidhar Nelluri, SBU Head, Fortis Hospital Vadapalani added, “The newly constructed ICU is a testament to our unwavering commitment towards transforming the healthcare landscape of the region. With an increase in the services offered and the number of patients needing dedicated treatment, the demand for ICU beds has increased. Serving with our motto, “saving and enriching lives”, reaffirmed patient confidence in Fortis Hospital Vadapalani, resulting in more patients coming to us for various treatments and surgeries. With this new state-of-the-art ICU, more patients will benefit from our services. They can be rest assured that our team of super specialists will offer round-the-clock excellent care to all patients.”

Venkata phanidhar dr govini hand over a poetry to ma subramanian
Venkata phanidhar dr govini hand over a poetry to ma subramanian

 

வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை 17 படுக்கைகள் கொண்ட பல்துறை புதிய தீவிர சிகிச்சைப் பிரிவைத் தொடங்கியுள்ளது

புதிய தீவிர சிகிச்சைப் பிரிவு மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு திரு மா. சுப்பிரமணியன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.  




Thiru Ma Subramanian and Venkata Phanidhar Nelluri inaugurate
Thiru Ma Subramanian and Venkata Phanidhar Nelluri inaugurate

அனைத்து நோயாளிகளுக்கும் தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்கான தொடர் முயற்சியாக, வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 17 படுக்கைகள் கொண்ட பல்துறை தீவிர சிகிச்சை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த புதிய வசதி மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் 24 மணி நேர பல்துறை நிபுணர்களின் கண்காணிப்பில் செயல்படும். இது தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு உயர்-நிலை தீவிர சிகிச்சையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மையத்தில் உள்ள 58 ஐசியூ படுக்கை கொண்ட  பிரிவுகளுடன் இந்த புதிய ஐசியூ கூடுதல் பிரிவாக இருக்கும். மாண்புமிகு தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவை மற்றும் அதற்கு ஆதரவாக அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைவர் திரு. வெங்கட்டா ஃபணிதர் நெல்லூரி மற்றும் மூத்த மருத்துவப் பணியாளர்களும் தொடக்க  விழாவில் கலந்து கொண்டனர்.




இதயநோய், எலும்பியல், நரம்பியல், நுரையீரல், இரைப்பைக் குடலியல் மற்றும் கல்லீரல் போன்ற பல்துறை நிபுணர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் எலும்பு மற்றும் மற்ற உறுப்புகள் சம்பந்தப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இருபத்தி நான்குமணி நேரமும் இருப்பர்.

வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தலைவர் திரு. வெங்கட்டா ஃபணிதர் நெல்லூரி மேலும் கூறுகையில், “புதிதாக கட்டப்பட்ட ஐசியூ, எங்களின் மேம்பட்ட சிகிச்சை வழங்குவதின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். மருத்துவத் துறையின் முன்னேற்றம், வழங்கப்படும் நவீன சிகிச்சைகளுக்காக ஐசியூ படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. “உயிர்களைக் காப்பாற்றுதல் மற்றும் வளப்படுத்துதல்என்ற எங்களின் குறிக்கோளுடன் சேவை செய்வது வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மீதுள்ள நோயாளிகளின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, இதன் விளைவாக அதிகமான நோயாளிகள் பல்வேறு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக எங்களை அணுகுகிறார்கள். இந்த புதிய அதிநவீன ஐசியூ பிரிவு மூலம், அதிக நோயாளிகள் பயனடைவார்கள். எங்கள் சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் குழு அனைத்து நோயாளிகளுக்கும் 24 மணி நேரமும் சிறந்த சிகிச்சை அளிப்பர் என்று உறுதியாக நம்பலாம்.”