கல்லூரி மாணவர்களுக்கு இலவச மென்திறன் மேம்பாடு பயிற்சி சென்னை டுவின்டெக் அகாடமி மூலம் நடத்தப்பட்டது
ஒரு நாட்டின் உன்னத நிலையை தீர்மானிப்பது இளைஞர்களின் அறிவாற்றல் மற்றும் திறன் ஆகியவை ஆகும்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளின் (பல்கலைக்கழக பாடத்திட்டம்) தங்களின்சொந்த பாடங்களில் சிறப்பாக உள்ளார்கள் ஆனால் அவர்களின் மென்திறன் பயிற்சி (Soft Skills) குறைவாகவே உள்ளது,
வாழ்க்கையில் தெளிவான திட்டமிட்ட குறிக்கோளுடன், முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால், சாதாரண மாணவர்களும் சரித்திரம் படைக்க முடியும். பட்டமும், சான்றுகளும் அவசியம்தான் என்றாலும் அத்துடன் மென்திறமை எனப்படும் (soft skills) சேர்ந்திருக்கும் போதுதான் ஒரு சக்தி வாய்ந்த பணித்திறன் உருவாகிறது.
அதனை கருத்தில் கொண்டு சென்னை டுவின்டெக் அகாடமி மாணவர் மென்திறன் மேம்பாடு பயிற்சியை கல்லூரி மாணவ – மாணவிகள் பங்குபெறும் வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தீர்மானித்து இன்று அந்த பயிற்சியின் முதல் அத்தியாயம்(20.11.2022 அன்று) சிறப்பாக நடந்தது.
இந்த மிக முக்கியமான பயிற்சியை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் முன்னாள் முதன்மை பொது மேலாளர் திரு S. R சந்திரன் அவர்கள் தொடக்கி வைத்தார். நாங்கள் படிக்கும் பொது எங்களுக்கு இது போன்ற பயிற்சியை எந்த நிறுவனமும் நடத்தவில்லை. இந்த பயிற்சியின் சிறப்பு மாணவர்கள் வேலைக்கு போகும்போது தான் தெரியும் என்றும். மென்திறன் மேம்பாடு பயிற்சியை நடத்தும் சென்னை டுவின்டெக் கல்வி நிறுவனத்தையும் பாராட்டினார்.
சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் பிரபல கல்லூரிகளான கோடம்பாக்கம் மீனாட்சி பெண்கள் கல்லூரி, சங்கர நேத்ராலயா கல்லூரி , நந்தனம் அரசு கலைக்கல்லூரி ,ஜெயா இன்ஜினியரிங் கல்லூரி,, ஆவடி நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர்.
சங்கர நேத்ராலயா ஆப்டோமெட்ரி கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ர . கிருஷ்ணகுமார் அவர்களும் பங்குகொண்டு மாணவர்களையும் / டுவின்டெக் கல்வி நிறுவனத்தின் செயல்பாடுகளையும் வாழ்த்தினார்.
40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தொழில் மற்றும் பயிற்சி அனுபவம் பெற்ற பேராசிரியர் திரு. R. ராமகிருஷ்ணன் மற்றும் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்ற திரு . A. மகாலிங்கம் அவர்களும் இந்த பயிற்சியை சிறப்பாக நடத்தினர்.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்பவர் களுக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியம் என்று இந்த பயிற்சியில் பங்குபெற்ற மாணவ – மாணவிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்