Fortis Vadapalani celebrates 75 Years of Independence by organizing Blood Donation Drive

Fortis Vadapalani celebrates 75 Years of Independence by organizing Blood Donation Drive
Fortis Vadapalani celebrates 75 Years of Independence by organizing Blood Donation Drive

Fortis Vadapalani celebrates 75 Years of Independence by organizing a Blood Donation Drive

 ~ Fortis Hospital, Vadapalani in association with Nourishment for the Needy organized a blood donation camp to encourage the youth to participate in blood donation.

On the 75th Independence Day, Fortis Hospital, Vadapalani along with Nourishment for the Needy, an NGO, organized a day-long Blood Donation Camp on August 15, 2022, at Fortis Hospital, Vadapalani. The event was graced by Chief Guest Social Activist and MDMK Chief Secretary Thiru Durai Vaiyapuri and Mr. Venkat Phanidhar Nelluri, Zonal Director, Fortis Hospitals, and witnessed the participation of 100 donors.




 Safe blood saves lives. Blood is the most precious gift that anyone can give to another person – the gift of life. A decision to donate blood can save a life, or even several if the blood is separated into its components – red cells, platelets, and plasma. Every pint of your blood can save the life of upto 3 people, improve their lives, and enhances social solidarity. It sends a powerful message of mutual aid and brings about a societal commitment. For healthy adults, blood donation is not only safe, but also provides a sense of belonging and pride.

Although many patients requiring transfusion they do not have timely access to safe blood. This blood donation drive is aimed to encourage the youth and instill the sense of responsibility among them. There is a dearth for blood because of the fear of infection among donors. To avoid this kind of a situation in future, Fortis Hospital urges the youth to volunteer to donate blood.

Gracing the occasion, Mr. Venkat Phanidhar Nelluri, Zonal Director, Fortis Hospitals, Vadapalani said “shortage of blood is a serious concern. According to the World Health Organization (WHO), India suffers from an annual deficit of 2 million blood units. This is because only 1% of the Indian population donates blood each year. Every life is important, healthy donors are even more important and one needs to understand the urgency of saving lives by donating blood. As a healthcare providers, we should be at the forefront of awareness drive and campaigns to educate the masses, especially the youth on the importance of blood donation in our Tamil Nadu and the nation”.

Speaking at the blood donation camp, the organizers from Nourishment for Needy, R.V. Satheesh Kumar, Director Programme added, “The blood donation camps are conducted periodically to ensure that as many lives as possible are saved. A sense of moral responsibility in creating a healthy community is established among those who are committed to save lives. Every camp encourages first timers, youth, and students to be a donor for a lifetime. On this Independence Day, where we pay homage to our freedom fighters, it is important that the donors are also given recognition”.

 To register to become a blood donor, call 044 4020 4040.




Second from left - Mr. Venkata Nelluri (Zonal Director Fortis Hospital), Dr. Jyotirmaya Dash, Cardiologist and one of the donors welcoming Thiru Durai Vaiko (Social Activist) with the blood
Second from left – Mr. Venkata Nelluri (Zonal Director Fortis Hospital), Dr. Jyotirmaya Dash, Cardiologist and one of the donors welcoming Thiru Durai Vaiko (Social Activist) with the blood

ஃபோர்டிஸ் வடபழனி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது

 ~ வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனை, நரிஷ்மென்ட் பார் நீடி  தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இளைஞர்களை ரத்த தானத்தில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில் ரத்த தான முகாமை நடத்தியது.

75வது சுதந்திர தினத்தையொட்டி, வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை, நரிஷ்மென்ட் பார் நீடி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஆகஸ்ட் 15, 2022 அன்று வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் ஒரு நாள் இரத்த தான முகாமை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக சமூக ஆர்வலரும், ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளருமான திரு துரை வையாபுரி மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மண்டல இயக்குநர் திரு.வெங்கட் ஃபணிதர் நெல்லூரி ஆகியோருடன் 100 இரத்த கொடையாளர்கள் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பான இரத்தம் உயிர்களை காப்பாற்றுகிறது. இரத்தம் என்பது மற்றொரு நபருக்கு வழங்கக்கூடிய மிகவும் விலைமதிப்பற்ற பரிசாகும். இரத்த தானம் செய்வதற்கான முடிவு ஒரு உயிரைக் காப்பாற்றும், அல்லது இரத்தத்தை அதன் கூறுகளாகப் பிரிக்கப்பட்டால் – சிவப்பு அணுக்கள், பிளேட்லெட்டுகள் மற்றும் பிளாஸ்மா போன்று – பல உயிரைக் காப்பாற்ற முடியும். உங்கள் இரத்தத்தின் ஒவ்வொரு யூனிட்டும் 3 பேரின் உயிரைக் காப்பாற்றவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் முடியும். இது பரஸ்பர உதவியின் சக்திவாய்ந்த செய்தியை அனுப்புகிறது மற்றும் சமூக அர்ப்பணிப்பைக் கொண்டுவருகிறது. ஆரோக்கியமானவர்களுக்கு, இரத்த தானம் பாதுகாப்பானது மட்டுமல்ல, ஒரு பெருமைக்குரிய  உணர்வையும் வழங்குகிறது.




பல நோயாளிகளுக்கு இரத்தமாற்றம் தேவைப்பட்டாலும் அவர்களுக்கு பாதுகாப்பான இரத்தம் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை. இந்த இரத்த தான இயக்கமானது இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களிடையே பொறுப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தானம் செய்பவர்களிடையே தொற்று நோய் பீதியின் காரணமாக ரத்தத்திற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க, இளைஞர்கள் இரத்த தானம் செய்ய முன்வருமாறு ஃபோர்டிஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்கிறது.

Fortis Vadapalani celebrates 75 Years of Independence by organizing Blood Donation Drive
Fortis Vadapalani celebrates 75 Years of Independence by organizing Blood Donation Drive

வடபழனியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் மண்டல இயக்குநர் திரு.வெங்கட் ஃபனிதர் நெல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “இரத்தப் பற்றாக்குறை தீவிர கவலை அளிக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்தியா ஆண்டுக்கு 2 மில்லியன் யூனிட் இரத்த பற்றாக்குறையால் பாதிக்கப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 1% மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் இரத்த தானம் செய்வதே இதற்குக் காரணம். ஒவ்வொரு உயிரும் முக்கியமானது, ஆரோக்கியமான நன்கொடையாளர்கள் இரத்த தானம் செய்வதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான முக்கிய சேவையை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சுகாதார நிறுவனமாக, நமது தமிழ்நாட்டிலும் தேசத்திலும் இரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்குக் எடுத்துரைப்பதற்கான விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பிரச்சாரங்களில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும்.

ரத்த தான முகாமில் நரிஷ்மென்ட் பார் நீடி அமைப்பாளர்கலான ஆர்.வி. சதீஷ் குமார், இயக்குனர் மேலும் கூறுகையில், “இயன்றவரை பல உயிர்கள் காப்பாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக இரத்த தான முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் தார்மீக பொறுப்பு உணர்வு, உயிர்களைக் காப்பாற்ற உறுதிபூண்டவர்களிடையே நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமும் முதன்முறையாக வருபவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை வாழ்நாள் முழுவதும் நன்கொடையாக இருக்க ஊக்குவிக்கிறது. இந்த சுதந்திர தினத்தில், நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, ​​நன்கொடையாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படுவது முக்கியம்.

இரத்த தானம் செய்ய விரும்புவார்கள் பதிவு செய்ய, 044 4020 4040 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.