Food safety complaint Whatsapp Number
“உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன் படி சட்ட விதிகள் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்குவதை உறுதி செய்யப்பட்டூள்ளது. இதன் படி உணவு வணிகர்கள் தாங்கள் நடத்தும் உணவு வணிகத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு பொருட்களை வழங்குவதிலும் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றி உணவு வணிகம் புரிவதையும் கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.
சென்னை முழுவதும் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்திடவும் உணவு கலப்படங்களை தடுத்திடவும் உணவு பொருட்களின் மீது தெரிவிக்கப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுத்திடவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி மேற்பார்வையில் ஒரு மாவட்ட நியமன அலுவலர் கீழ் 20 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் உணவு வணிகங்களில் கீழ்க்கண்ட முக்கிய உணவு பாதுகாப்பு முறைகளை உணவு வணிகர்கள் கடைபிடிப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- காய்கறி மற்றும் பழங்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் செயற்கை முறையில் கால்சியம் கார்பைடூ கற்களை கொண்டோ அனுமதிக்கப்படாத ரசாயன மருந்துகளை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யக்கூடாது.
- தேயிலை தூளில் செயற்கையான நிறமிகளை சேர்க்கவோ மற்றும் பயன்படுத்திய தேயிலை இலைகளை சேர்க்கவோ கூடாது.
- உணவு விடுதிகளில் உணவு பொருட்களில் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.
- உணவகங்கள் மற்றும் தேநீர் விடுதிகளில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது.
- பொட்டாசியம் புரோமெட் சேர்க்காத பேக்கரி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
- சூடான டீ, காபி சாம்பார் ரசம் மற்றும் அசைவ குழம்புகளை பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்யக்கூடாது. பிளாஸ்டிக் (பாலிதீன் பைகளில் பாலி எத்திலின், பாலி ஸ்ப்ரின், பாலி வினைல் குளோரைடூ போன்ற வேதி பொருட்கள் சூடான உணவு பொருட்களில் எளிதில் கலந்து உடலுக்கு பெரும் தீங்குகளை ஏற்படுத்தும். ஆகையால் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பைகளை
- தவிர்த்து உணவுக்கான தரத்துடன் உள்ள (FOOD GRADE) பேக்கிங் பொருட்களையோ மற்றும் அலுமினியம் பாயில் பேக்கிங் கவர்களை கொண்டு பார்சல் செய்ய வேண்டும்.
- இட்லி உணவு பொருளை வேக வைப்பதற்கு பாலித்தீன் தாள்களை பயன்படுத்தக்கூடாது. சமையலுக்கு அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
- பாக்கெட் உணவு பொருட்களில் இந்திய உணவு பாதுகாப்பு ஆணையத்தால் (₹85க) சான்றளிக்கப்பட்ட உரிம பதிவெண்கள் உள்ளதை உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.
- (ISI) மார்க் முத்திரை மற்றும் (FSSAI) உரிம பதிவெண்கள் இல்லாத குடிநீர் கேன்கள் (AGMARK/FSSAI) மார்க் முத்திரை இல்லாத நெய் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
- சாலையோர தள்ளுவண்டி கடைகளில் உணவு பொருள் விற்பனை செய்பவர்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். .உணவு பண்டங்களில் ஈ மற்றும் தூசுக்கள் படியா வண்ணம் மூடி விற்பனை செய்யவேண்டும். செயற்கை வண்ணங்களை உணவு பொருட்களில் சேர்க்கக்கூடாது.
- பாக்கெட் உணவு பொருட்களில் தயாரிக்கப்பட்ட தேதி, உட்கொள்ளும் காலம் அல்லது காலாவதி தேதி, பேட்ச் எண், உணவு பொருளில் சேர்க்கப்பட்ட இடு பொருட்கள் விபரம், உணவு பொருளில் உள்ள நுண்ணூட்ட சத்துக்கள் விபரம் ஆகியவை கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.
- தமிழக அரசால் தடை செய்யபப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ கூடாது.
இந்நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சமீபத்தில் சென்னை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டபொழுது மேற்படி உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறப்படும் நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் பொழுது தவறிழைக்கும் உணவு வணிகங்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும் 2011 ஒழுங்குமுறை விதிகள் கீழ் குற்றவியல் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் உணவு பொருட்களில் மீதான புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள எதுவாக 9444042322 என்ற வாட்ச் அப் எண்ணிற்கு குரல் பதிவு மூலமோ, படங்கள் மற்றும் விடியோ மூலமோ, அழைப்பின் மூலமோ தெரிவிக்கலாம், மேலும் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விபரம் மற்றும் அவர்களுடைய அலைபேசி எண்ணிற்கோ உணவு புகார்களை தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதனுடைய விபரங்கள் புகார்தாரர்க்கு தெரிவிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.விஜயா ராணி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உணவு பொருட்கள் மீதான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கட்செவி செயலி எண் (Whatsapp Number) 9444042322 அல்லது அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விபரம் மற்றும் அலைபேசி எண்கள் மாவட்ட நியமன அலுவலர் : மருத்துவர். பி. சதீஸ்குமார் அவர்கள் – 9442225555
List of Food Safety Officer – Chennai District
List of Food Safety Officer – Chennai District |
|||||
Sl.N
o |
Name of the Food Safety
Officers |
FSO Code. |
Area |
Mobile No | |
1 |
N.H. JAYAGOPAL |
527 | KODUNGAIYUR, M.K.B. NAGAR, KORUKKPET,TONDIARPET, NEW WASHERMENPET |
|
9841453114 |
2 |
Rajapandi A |
528 |
TONDAIRPET,OLD WASHERMENPET, NEW WASHERMENPET,
KORUKKUPET |
|
9444212556 |
3 |
R. SELVAM |
529 |
ROYAPURAM, OLD WASHERMENPET, TONDAIRPET, PARIS, SEVEN WELLS, MANNADY |
|
9444172751 |
4 | R. KANNAN | 531 | KONDITHOPE, SOWCARPET | 9444171585 | |
5 | K. JEBARAJA SHOBANA KUMAR I/C | 532 | PULIANTHOPE | 9840348538 | |
6 | ALAGU PANDI | 533 | PARKTOWN | 9790183187 | |
7 | Elumalai | 534 | Ayanavaram, Kolathur | 9443432518 | |
8 | V. SUTHAKAR | 535 | ANNA NAGAR WEST, VILLIVAKKAM, | 7871555786 | |
9 |
A. RAMARAJ |
536 |
ANNANAGAR, KILPAUK, SHENOY NAGAR, AMINJIKARAI |
|
9940067099 |
10 |
Sundaramoorthy P |
537 |
KOYAMBEDU, ANNA NAGAR WEST, VIRUGAMBAKKAM, NESAPAKKAM,
CHINMAYA NAGAR |
|
8122227055 |
11 |
K. JEBARAJA SHOBANA KUMAR |
538 |
CHOOLAIMEDU, MMDA COLONY, ARUMBAKKAM, AMINJIKARAI, NUNGAMBAKKAM, MAHALINGAPURAM, CHETPET, SHENOY NAGAR |
|
9840348538 |
12 |
S. BASKARAN |
540 |
ROYAPETTAH, TRIPLICANE, MYLAPORE, ICE HOUSE, TTK ROAD |
9940920790 |
13 |
N. RAJA |
541 |
PERIAMET, PURSAWALKAM, OTTERI, VEPERY, PATTALAM, KOSAPET, EGMORE, PURSAWALKAM, CHINTHADARIPET |
|
9994238989 |
14 |
J. MANIMURUGAN |
543 |
VALLUVARKOTTAM, TEYNAMPET, KODAMBAKKAM, T.NAGAR, CHOOLAIMEDU HIGH ROAD. |
|
9791141691 |
15 |
Deepa N |
545 |
VADAPALANI, ASHOK NAGAR, SALIGRAMAM, K.K. NAGAR |
|
9486935867 |
16 |
A. SATHASIVAM |
546 |
T.NAGAR, WEST MAMBALAM, SAIDAPET |
9444909695 |
|
17 |
M. MUTHUKRISHNAN |
548 |
GUINDY |
|
9942495309 |
18 |
S. NATARAJAN |
549 |
MANDAVELI, R.A. PURAM, ALWARPET, ABIRAMAPURAM, TEYNAMPET, SANTHOME, MRC NAGAR, MYLAPORE |
|
9840199340 |
19 |
A. CHIDAMBARAM |
550 |
ADAYAR, THIRUVANMIYUR, BESENT NAGAR |
|
9840576892 |
20 |
P. SUNDRARAJ |
551 |
VELACHERY, TARAMANI,ADAMBAKKAM, THIRUVANMIYUR |
|
8056198866 |