Making banking accessible to the unbanked – சாந்தி அக்கா

Shanthi_ FIA

வங்கிகள்  இல்லாத இடங்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்குமாறு செய்வது

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகள் காலஅளவில் இலட்சக்கணக்கான நபர்களை வங்கிச்சேவையைப் பெற்று பயன்படுத்துகின்ற குழுவிற்குள் FIA குளோபல் வெற்றிகரமாக கொண்டு வந்து இணைத்திருக்கிறது.  சமூகத்தின் அனைத்துப் பிரிவினைரையும் ஒருங்கிணைத்து உள்ளடக்க வேண்டுமென்ற இதன் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் இணை நிறுவனரான சீமா பிரேம் அவர்களின் விருப்பம், நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் அவருக்கு இருந்த சுதந்திரம் மற்றும் ஆர்வம் ஆகியவற்றோடு பயணத்தின் மீது அவர் கொண்டிருந்த பேரார்வம் ஆகியவை அனைத்தும் ஒருங்கிணைந்தே இந்த நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறது.




இந்தியாவிலும் மற்றும் நேபாளத்திலும் 45,000 கிராமங்கள் மற்றும் 4,600 நகரங்களை உள்ளடக்கிய 700-க்கும் அதிகமான மாவட்டங்களில் வசிக்கும் 5 கோடி மக்களுக்கு FIA தற்போது சேவையாற்றி வருகிறது.  பாலினப் பாகுபாடில்லாமல் சமவாய்ப்புகளை உறுதி செய்கின்ற பணி வழங்குனராகத் திகழும் FIA – ல் 4000-க்கும் கூடுதலான பெண் வங்கிப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இந்தியாவின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்களை வங்கிச்சேவையைப் பெறுபவர்களது குழுவிற்குள் கொண்டுவந்து சேர்ப்பதில் இப்பெண் பணியாளர்களது பணி முக்கியமானது மற்றும் பாராட்டுதலுக்குரியது.

 FIA பேங்க் மித்ரா (நண்பர்) வாழ்க்கை குறிப்பு: சாந்தி

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் பருவை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி என்ற பெயருள்ள 55 வயது பெண்மணி.  10-வது வகுப்பு வரை படித்திருக்கும் இப்பெண், 2011- ம் ஆண்டு, டிசம்பர் மாதத்திலிருந்து FIA -ல் இணைந்து செயலாற்றி வருகிறார்.  நீண்டகாலமாக தொடர்ந்து பணியாற்றும்  நபர்களுள் ஒருவரான இவர், ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை வருவாயாக ஈட்டி வருகிறார்.  இதுநாள் வரை 3000-க்கும் கூடுதலான வங்கிக் கணக்குகளை கிராமப்புற மக்களுக்காக தொடங்க உதவியிருக்கும் இவர், ஒவ்வொரு வாரமும் NREGA  -ன் கீழ், 500+ வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்தல் நடவடிக்கைகளையும் திறம்பட மேற்கொண்டு வருகிறார்.

3 நபர்களை உள்ளடக்கிய குடும்பத்தில் ஒருவரான சாந்தி, இந்த வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபராகவும் இருக்கிறார்.  FIA -விருந்து இவருக்கு கிடைக்கும் வருவாயையும் மற்றும் அவர்களது மாட்டுப்பண்ணையிலிருந்து வருமானத்தையும் தான் இவரது குடும்பம் முற்றிலும் சார்ந்திருக்கிறது.




மாட்டுப்பண்ணையிலிருந்து சாந்திக்கு கிடைத்த வருமானம் மிகவும் குறைவாகவே இருந்தது.  இதனால் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொரு மாதமும் கடும் போராட்டமாகவே இருந்து வந்தது.  FIA – விலிருந்து கிடைக்கும் வருவாயின் காரணமாக குடும்ப செலவுகளை சாந்தியால் இப்போது சமாளிக்கவும் மற்றும் கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழவும் முடிந்திருக்கிறது.  அவரது மகள்களுள் ஒருவரது திருமணத்திற்காக சாந்தியால் இப்போது பணத்தையும் சேமித்து வைக்க முடிகிறது.

‘சாந்தி அக்கா’ என்று அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சமூகத்தினரால் பாசத்தோடு அழைக்கப்படும் சாந்தி, நம்பிக்கைக்குரிய நபராக நற்பெயரை பெற்றிருக்கிறார்.  உண்மையைச் சொல்வதென்றால், இவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் அவர்களது பண விவகாரங்களைப் பொறுத்தவரை இவரையே நம்பி செயல்படுகின்றனர்.  இப்பகுதியில் இருக்கின்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் பேமென்ட்களை இவர் வினியோகித்து வருகிறார்.

தற்போது, காப்பீடு (இன்சூரன்ஸ்) சேவைகளையும் மற்றும் மொபைல் ரீசார்ஜ் சேவையையும் வழங்க சாந்தி திட்டமிட்டு வருகிறார்.  இங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கையை இது எளிதானதாக மாற்றும் என்பதோடு, சாந்தியின் வருவாயையும் அதிகரிப்பதற்கு இது உதவும்.

FIA உடன் அவரின் பயணம்:

ஒரு பேங்கிங் கரஸ்பான்டன்ட் என்ற பதவிப் பொறுப்பில் சாந்தி FIA -ல் இணைந்தார் மற்றும் பரோடா வங்கியின் FIA பிரதிநிதியாக அவர் நியமனம் செய்யப்பட்டார்.  கிராம மக்களுக்கு வங்கிக் கணக்குகளை தொடங்க உதவுவதற்கு ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை சந்தித்த அவர், வங்கியில் பணத்தை சேமிக்கும் செயல்முறை பற்றி அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக அவர்களை வங்கியின் வாடிக்கையாளர்களாக மாற்றியிருக்கிறார்.

10 ஆண்டுகளுக்கும் அதிகமாக FIA CSP ஆக பணியாற்றி வரும் திருமதி. சாந்தி, அவரது கிராமத்தில் நம்பிக்கையான, நேர்மையான நபர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார்.  இந்த நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் காரணமாகத்தான் இவரது வாடிக்கையாளர்கள் இவரைத் தேடிச்சென்று சேவையைப் பயன்படுத்துகின்றனர்.




ஐம்பது வயதை கடந்துவிட்ட போதிலும் கூட, ஒரு FIA CSP ஆக தனது பணி வாழ்க்கையை தொடரவும் மற்றும் அவரது பிசினஸ் சேவைகளை இன்னும் வளர்த்தெடுக்கவும் சாந்தி விரும்புகிறார்.  வருவாய் ஈட்டுவதற்கும், குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் அவரது கிராமத்தில் கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் FIA தனக்கு உதவியிருக்கிறது என்று அவர் கூறுகிறார்.  தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு ஏறக்குறைய 7 முதல் 8 இலட்சம் ரூபாய் வரை சம்பள வினியோகத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், அந்த தருணங்களை நினைவுகூர்ந்தார்.

கடுமையான உழைப்பு  மற்றும் மனஉறுதியின் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தின் மீதான பொறுப்பை சொந்தமாக சாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் வசிக்கும் கிராமத்திலுள்ள பெண்களுக்கு ஊக்கமும், உத்வேகமும் தருகின்ற முன்மாதிரி பெண்மணியாக அவர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.