டிஜிட்டல் திரையைத் தொடர்ந்து பார்ப்பதன் விளைவாக ஏற்படும் கடுமையான கண் பிரச்சனைகள்

eye-problems-watching-TV
eye-problems-watching-TV

டிஜிட்டல் திரையைத் தொடர்ந்து பார்ப்பதன் விளைவாக ஏற்படும் கடுமையான கண் பிரச்சனைகள். 

டாக்டர்.கலாதேவி , தலைமை மருத்துவ அதிகாரி, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, போரூர்.

இந்த காலகட்டத்தில் மாணவர்களும் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை பணியாளர்களும் மணிக்கணக்கில் இடைவிடாமல் தொடர்ந்து கணினி திரைகளையும் மற்றும் மொபைல் போன் திரைகளையும் பார்ப்பது பற்றி கவலைப்படுவதில்லை. இதுபற்றி அவர்களை கேட்டால், பொதுமுடக்கம் அமலில் உள்ள இக்காலத்தில் பெரும்பாலும் ஆன்லைனிலேயே கற்க வேண்டியிருக்கிறது என்றும் மற்றும் இணையதளத்திலிருந்து அவர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களை சேகரித்து அவர்களுடைய புராஜக்டிற்கு சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது என்றும் சாக்குப்போக்கு கூறக்கூடும். இதற்காக தொழில்நுட்பத்தை குறைகூற இயலாது. அதிக நேரம் கணினியையும், மொபைலையும் பயன்படுத்துவதே அவர்களுடைய கண்களுக்கு சோர்வையும் மற்றும் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தி பல்வேறு கண் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.




பல நாடுகளில் கொரோனா தொற்றுப்பரவலின் காரணமாக அமல்படுத்தப்பட்டிருக்கும் பொதுமுடக்கம் / ஊரடங்கானது, பெரும்பாலான மக்கள் அதிக அளவில் கணினி / மொபைல் / டிவி திரைகளை பயன்படுத்தும் காலஅளவை அதிகரித்திருக்கிறது மற்றும் இதனால் கடுமையான கண் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அதிக இடர்வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இத்தகைய திரைகளில் பணிபுரியக்கூடிய 50 சதவிகிதம் மற்றும் 90 சதவிகிதத்திற்கு இடைப்பட்டவர்களுக்கு  குறிப்பாக மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கண் பிரச்சனைகள் சார்ந்த சில அறிகுறிகள் உள்ளன என்று பல ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். கணினிகள், டேப்லெட்கள், PADS முதலிய ஒளித் திரைகளில் பார்த்தல் மற்றும் மொபைல் போன்களில் சமூக ஊடகங்களை பிரவுசிங் செய்தல், ஆன்லைன் கேமிங் விளையாடுதல் மற்றும் திரைப்படங்களைப் பார்த்தல் ஆகியவற்றில் பெரும்பாலான நேரத்தை மாணவர்கள் செலவு செய்வதே இதற்கு முக்கிய காரணமாகும்.  இதுபோன்ற நேர்வுகளில் கண் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தக்கூடாது மற்றும் கண் சுகாதாரம் குறித்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் இன்றியமையாதது.

கண் நலிசோர்வு: இது முக்கியமாக, ஒளிபடர்ந்த சாதனங்களுடன் மற்றும் பெரும்பாலும் ஏதுவான ஒளிக்கு மற்றும் பணிச்சூழலுக்கு குறைவான நிலைக்கு நேரடியாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் வெளிப்படுவதாலும் கண் நலிசோர்வு ஏற்படுத்தப்படுகிறது.  இதுபோன்ற கண் நலிசோர்வு கண்கள் வறண்டு, அரிப்பு மற்றும் சிவத்தலுடன் எரியக்கூடும்.  இது மங்கலான பார்வை, லேசான உணர்வுத்தன்மை மற்றும் கவனம் செலுத்துவதில் சுணக்கம் ஆகியவற்றிற்கும் வழிவகுக்கக்கூடும்.  இத்துடன், தலைவலி, கழுத்து, தோள்பட்டை அல்லது முதுகு வலிகள் மற்றும் ஒட்டுமொத்த சோர்வுடன், தூக்கப் பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

கணினி பார்வை நோய்க்குறி: இந்த கண் பிரச்சனை. கார்பல் ட்யூனல் சின்ட்ரோம் (மணிக்கட்டு குகை நோய் தொகுப்பு) போன்றது.  கண்கள் ஒரு நீண்ட காலத்திற்கு ஒரே பாதையை பின்பற்றுமானால் இந்தப் பிரச்சனை எழுகிறது.  கணினிகளுடன் வேலை செய்யும்போது, கண்கள் எப்போதும், எல்லா சமயங்களிலும் ஃபோக்கஸ் மற்றும் ரீஃபோக்கஸ் செய்யவேண்டும்.  கண்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கக்கூடிய மற்றும் மாறிக் கொண்டிருக்கக்கூடிய படங்களுக்கு / உருவங்களுக்கு / பிம்பங்களுக்கு ரீஆக்ட் செய்யக்கூடும்.  இதன் விளைவாக கண் தசைகளில் நிறைய சோர்வு விளைவிக்கக்கூடும்.





இதற்கு மேலும், கான்ட்ராஸ்ட் (வேறுபாடு), ஒளிசிமிட்டல், இமைத்தல் மற்றும் கூசுதல் ஆகியவற்றை மாற்ற முற்படும் திரை நம் கண்களுக்கு கடுமையான பிரச்சனைகளை விளைவிக்க நேரிடும். மேலும் கண்கள் தொடர்ந்து நகரக்கூடிய மற்றும் மாறக்கூடிய உருவப் படங்களுக்கு எதிர்வினையாற்றி கண் தசைகளுக்கு நிறைய சோர்வை விளைவிக்கக்கூடும். கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட ஒளிர்திரைகளுடன் வேலை செய்வது வயது அதிகரிக்க கடினமாகும்.  ஏனெனில், இயற்கை லென்ஸ்கள் மிகவும் குறைந்த இணக்கத்தன்மையுடையதாக ஆகிறது.

ஒரு டிஜிட்டல் திரையை பார்க்கும்போது, இயல்பாக கண் சிமிட்டத் தவறுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.  இது கண்களை உலரச் செய்து, வேலை செய்யும்போது காலமுறைதோறும் பார்வையை மங்கச் செய்கிறது.

டிஜிட்டல் சாதனங்களை முறையற்ற வகையில் பார்ப்பதனால் ஏற்படும் சிக்கல்கள்

டிஜிட்டல் திரைகளை முறையற்ற வகையில் பார்ப்பது பல்வேறு கண் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீலநிற வெளிச்சத்திற்கு கண்களை வெளிப்படுத்துவது இதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும்.  இத்தகைய வெளிப்படுத்தலானது, விழித்திரை பிரச்சனைகள், கண் புரை நோய், வயதோடு தொடர்புடைய  விழிப்புள்ளி சிதைவு மற்றும் உறக்க சீர்குலைவுகள் ஆகியவற்றிற்கு வழிவகுக்கக்கூடும்.

சிகிச்சை: 

கண் அழுத்தம் மற்றும் உலர்ந்த கண்கள் ஆகியவை உட்பட, இத்தகைய கண் பிரச்சனைகளுக்கு கண் மருத்துவருடனான ஆலோசனையின் பேரில் எளிதாக சிகிச்சைபெற முடியும்.  பரிந்துரைக்கப்படுகின்ற கண் கண்ணாடிகளை அணிவது, கண் அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் தலைவலி ஏற்படாமல் தடுக்கும்.

கண் பிரச்சனைகளை குறைப்பதற்கு வாழ்க்கைமுறை மாற்ற நிவாரணங்கள்:

கணினி திரையிலிருந்து வெளிப்படும் அளவுக்கு அதிக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் கண் பிரச்சனைகளை விளைவிக்கிறது.  வெளிச்ச நிலை, எழுத்துருவின் அளவு, மானிட்டர் வைக்கப்பட்டிருக்கும் உயரம் மற்றும் திரையிலிருந்து அமர்ந்திருக்கும் தூரம் ஆகியவை உட்பட, கணினி திரை அமைப்புகளை சௌகரியமாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அமைத்துக்கொள்ளவும்.

திரையிலிருந்து வெளிவரும் பிரதிபலிப்பைக் குறைப்பதற்கு டிஜிட்டல் திரையின் கண்சிமிட்டல் மற்றும் கண் அசைவுகளை சரி செய்யவும்.  பொதுவான கண் பிரச்சனைகள் உருவாவதற்கு இவைகளே அதிக பங்களிப்பை செய்கின்றன.

டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துகின்றபோது உரிய காலஅளவுகளில் இடைவேளைகளை எடுத்துக்கொள்ளவும்.  20-20-20 விதியினைப் பயன்படுத்தவும்; 20 அடி தூரத்திலுள்ள இடத்தை, ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 நொடிகள் பார்ப்பது. வழக்கமான வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்வது, கண் பிரச்சனைகளிலிருந்து உங்களை பாதுகாக்கும்.  ஆரோக்கியமான உணவு முறையானது வயதுடன் தொடர்புடைய கண் பிரச்சனைகளை குறைக்கக்கூடும்.  தவறான மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சியானது, இரத்தஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் கண்களுக்கு ஆக்சிஜன் செல்லும் அளவை அதிகரிக்கும் மற்றும் நச்சுக்களை அகற்றுவதற்கு உதவும்.

நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்ப்பது, பொதுவாக கணினியை பார்ப்பதால் ஏற்படும் நோய் பாதிப்பு அறிகுறியை உருவாக்காது; எனினும், அதைப் பார்ப்பதற்காக நீங்கள் அமர்ந்திருக்கும் தூரத்தை இது சார்ந்திருக்கும்.  தொலைக்காட்சி பெட்டிக்கு மிக நெருக்கமாக அமர்ந்து பார்ப்பது கண் அழுத்தத்தையும் மற்றும் கழுத்தில் வலியுடன் கூடிய அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

கண்களை ஈரப்பதமுள்ளதாகவும், புத்துணர்வு உள்ளதாகவும் வைத்திருப்பதற்கு கண்களை மூடி திறக்கின்ற வழக்கத்தைப் பின்பற்றவும். ஆரோக்கியமான கண்களுக்கு, கண்களை மசாஜ் செய்வது ஒரு நிவாரணமாக கருதப்படுகிறது.  கைகளில் சூடு ஏறுகின்ற வரை நன்றாக தேய்த்து, கண்களுக்கு மேலே மிருதுவாக அழுத்தவும்.  ஒரு இயற்கையான வழிமுறையில் கண் தசைகளை தளர்வாக்குவதற்கு இது உதவும்.




பார்வைத்திறன் மோசமாகிவிடாமல் பாதுகாக்க உதவும் என்பதால், வீடுகளுக்கு வெளிப்புறத்தில் காற்றோட்டமுள்ள இடங்களில் அதிக நேரம் செலவிடுவது முக்கியமாகும்.  கட்டிடங்களுக்கு உள்ளேயே நேரத்தை செலவிடுவது கிட்டப்பார்வை ஏற்படும் இடரை அதிகரிக்கக்கூடும்.

கணினி பயன்பாட்டோடு தொடர்புடைய தலைவலி, கழுத்து, முதுகு மற்றும் தோள்பட்டை வலி ஏற்படும் இடரைக் குறைப்பதற்கு, குறைந்தது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒருமுறை திரையைப் பார்ப்பதிலிருந்து விலகிக் செல்லவும். எழுந்து நடக்கவும், கைகள், கால்கள், கழுத்து மற்றும் தோள்பட்டையை நீட்டி, மடக்கி சிறு உடற்பயிற்சிகள் செய்வது அழுத்தத்தையும் மற்றும் தசை களைப்பையும் குறைக்க உதவும்.

ஆகவே, எந்த வகையான டிஜிட்டல் திரையாக இருப்பினும், நீண்டநேரம் பார்ப்பதையும் மற்றும் ஒரு கையளவு நீள தூரத்திற்கும் குறைவான இடத்திலிருந்து பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது.

குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனைகள் செய்துகொள்வது, கண் பிரச்சனைகளுக்கான இடரிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும். கண் பரிசோதனையின்போது, உங்களது தினசரி கணினி பயன்பாடு குறித்த உண்மையான தகவலை மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

கண் ஆரோக்கியம் மீது சரியான அக்கறைகாட்டுவது பார்வைத்திறன் பிரச்சனைகளை குறைக்கும்.  குறித்த காலஅளவுகளில் கண் மருத்துவரை சந்தித்து, கண் பரிசோதனை செய்து கொள்வது முறையான பார்வைத்திறன் நீடிப்பதை உறுதிசெய்யும்.  மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் வழிமுறைகளை தவறாது செயல்படுத்துவது கண் பிரச்சனைகளை முற்றிலுமாக குறைப்பதற்கு நிச்சயம் உதவும்.

தொடர்புக்கு: # 118, ஆர்காட் சாலை, போரூர், TVS அரசு மோட்டார்ஸ் எதிரில், சென்னை.

No.118, Arcot Road, Opp. TVS Arasu Motors, Porur, Chennai, Tamil Nadu 600116.

CONTACT: 9769838863 Visit: Dr. Agarwals – Best Eye Hospital In India With 95+ Hospitals For Eye Treatment (dragarwal.com)

TIMINGS : Mon-Sat | 9AM – 6PM

#Closed on Sunday