A noble healthcare couple show the way to relief in a grave crisis

A-Mahalingam-Covid-Relief
A-Mahalingam-Covid-Relief

கரோனா ஊரடங்கு காலத்தே செய்த உதவி | சுகாதார வல்லுநர் தம்பதியினரின் தொண்டு

சமுதாய பொறுப்பும் மனிதாபிமானமும் கொண்ட தம்பதியினர் கரோனா தொற்றுகாலத்தில் செய்துவரும் பணி அனைவரது பாராட்டினையும் கவனத்தையும் பெற்று வருகிறது.

மருத்துவத்துறையில் நீண்ட காலமாக நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் பணியாற்றிவரும் திரு. திரு.அர்த்தநாரி மகாலிங்கம் மற்றும் கிராம சுகாதார செவிலியரான திருமதி ஜெயலெட்சுமி மகாலிங்கம் தான் அந்த தம்பதி.

ஆவடியை அடுத்த புதிய வெள்ளானூரில் வசித்துவரும் இந்த தம்பதியினர் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் தேவையான ஏழை எளியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.

வேலை இழந்ததால் வருமானம் இழந்து பசிக் கொடுமையால் வேதனையில் வாடும் மக்கள் உணவுக்கு என்ன செய்வார்கள் என்பதை உணர்ந்து ஊரடங்கு தொடங்கிய மார்ச்சு 22 முதலே அவர்களுடைய பணி தொடங்கிவிட்டது. அவர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், மளிகை சாமான்கள், காய்கறிகள், சமைத்த உணவு போன்றவற்றை சுமார் 1000 குடும்பங்களுக்கு மேலாக இதுவரையிலும் வழங்கியுள்ளார்கள்.

பெருங்கொள்ளைத் தொற்றான கரோனாவை கண்டு பயப்படாமலும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் ஆவடியைச் சுற்றியுள்ள  வெள்ளானூர், மோரை கிராமம், கொல்லுமேடு, வீராபுரம், கன்னியம்மன் நகர் மற்றும் அம்பத்தூரைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வீட்டிற்கே சென்று இந்த நிவாரணப் பொருட்களை வழங்கி இருக்கிறார்கள்.

கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வெள்ளானுர் கிராம சுகாதாரச் செவிலியரான ஜெயலட்சுமி, தனது கிராமத்தில் உள்ள கருவுற்ற, ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் குடும்ப வருமானம் இன்றி, சாப்பாட்டிற்கே வழியில்லாமல் இருப்பதைக் தனது கரோனா கணக்கெடுப்பின்போது அறிந்த செவிலியர் ஜெயலட்சுமி, கணவருடன் இணைந்து கர்ப்பிணி பெண்களுக்கும் உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தாராள மனம் கொண்ட நண்பர்கள், நலம் விரும்புவோரின் உதவியால்தான் இத்தகைய பேருதவிகளை தேவைப்பட்டோருக்கு இந்த நெருக்கடியான இக்கட்டான காலக்கட்டத்தில் உடனே செய்திட முடிந்ததும் என்றும் அப்போதெல்லாம் கண்ணீர் மல்க மக்கள் தெரிவித்த நன்றியினை மறக்க முடியாது என்றும் திரு.அர்த்தநாரி மகாலிங்கம் அன்புடன் நினைவு கூறுகிறார்.

A noble healthcare couple show the way to relief in a grave crisis 

Here’s what a quiet, simple, socially conscious and compassionate couple has been doing during this Covid 19 crisis.

Shri. A.Mahalingam (a Healthcare Professional with 3 decades of experience in Healthcare Administration and Academics) and his wife Smt. Jayalakshmi ( a Village Health Nurse ) residing in New Vellanur  village near Avadi identified the poor, needy and migrant workers in their area first. Deprived of monthly income and suffering hunger pangs , they had no means to buy even a square meal.  Since 22nd  March 2020, the day the lockdown began, this humble couple have distributed essentials like rice, pulses, vegetables, wheat flour and cooked food  to these people continuously for 30 days and have provided over 1000 families.

They braved the hot sun, humidity and the pandemic threat and covered the villages of New Vellanur, Morai, Veerapuram Kollumedu and New Kannikapuram in Avadi and few areas in Ambattur also, door delivering the provisions and food.

It is such acts of compassion and love by a few  people like this couple that help humanity survive during a major crisis like the Covid 19 pandemic.

Mr A Mahalingam and his wife in all humility averr that whatever they did just  could not have been possible but for the support and help received from their friends and well wishers.

All the beneficiaries have tearfully conveyed their gratitude to this selfless couple.