கொரோனாவால் உயிரிழந்த இ எஸ் ஐ காப்பீட்டாளரின் குடும்பத்துக்கு நிவாரணம்

corona relief
corona relief

கொரோனாவால் உயிரிழந்த இ எஸ் ஐ காப்பீட்டாளரின் குடும்பத்துக்கு நிவாரணம்

கொரோனா நிவாரண திட்டம்:

கொரோனாவினால் உயிரிழந்த இ.எஸ்.ஐ. காப்பீட்டாளரின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசின் தொழிலாளர், வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் கொரோனா நிவாரணத்திட்டம் மூலம் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் சார்ந்தோருக்கு 90 சதவீத சராசரி மாத ஊதியத்தினை நிவாரணமாக அவர்களின் வங்கிகணக்கிற்கு நேரடியாக மாதந்தோறும் செலுத்திவருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை சென்னையில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

வேலை இழந்தோருக்கான நிதியுதவி:




மேலும் ஒரு நலத்திட்டமாக ABVKY என்ற திட்டத்தின் மூலம் கொரோனா காரணத்தாலும், ஆட்குறைப்பு காரணத்தாலும் வேலை இழந்தோருக்கு அவருடைய ஊதியத்தின் 50 % தொகையை,3 மாத காலத்திற்கு ESIC வழங்குகிறது. இத்திட்டத்தின்கீழ் இதுவரை சென்னையில் 5014 காப்பீட்டாளர்களுக்கு சுமார் 6.6 கோடி ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

வருடம் ரூபாய் 120 செலுத்தினால் மருத்துவ வசதி:

இ.எஸ்.ஐ. காப்பீட்டாளர் 5 ஆண்டு காப்பீடு செலுத்தப்பட்டிருந்து, பணி ஓய்வு அல்லது விருப்ப பணி ஓய்வு பெற்றிருக்கும் பட்சத்தில் வருடம் ரூபாய் 120 /- செலுத்தி, இ. எஸ். ஐ மருத்துவமனை அல்லது மருந்தகத்தில் தனக்கும் தன் வாழ்க்கைத்துணைக்கும்  இ.எஸ்.ஐ. விதி 60/61 கீழ் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.




இவ்விதியின் கீழ் இ.எஸ்.ஐ. -யின் திட்டமான, நிரந்தர ஊனத்திற்கான ஓய்வூதியம்  பெறுபவரும் அவருடைய வாழ்க்கைத்துணையும் (PDB Pensioners) , மற்றும் சார்ந்தோருக்கான உதவித்தொகை பெரும் இறந்த காப்பீட்டாளரின் வாழ்க்கைத்துணையும் வருடம் ரூபாய் 120 /- செலுத்தி மருத்துவ வசதி பெற்றுக்கொள்ளலாம்.