குமாரி நேயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Bharatanatyam
சென்னையை சேர்ந்த திரு. செந்தில்குமாரின் மகளும், ஆச்சாரியா ஸ்ரீமதி. பாக்கியஸ்ரீ சதீஷ் அவர்களின் சீடருமான குமாரி. நேயா செந்தில் குமாரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சென்னை மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் தொழிலதிபர் திரு. நல்லி குப்புசாமி அவர்களின் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாரம்பரிய மார்க்க வரிசையில் வடிவமைக்கப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் நேயாவின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெருந்திரளான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. தில்லை ஷப்தம், இன்னும் என் மனம் எனத் தொடங்கும் வர்ணம், குறத்தி போன்ற உருப்படிகள் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டின் பெருமை மிக்க பண்பாடாக அறியப்படும் பரதநாட்டியத்தை கடந்த ஏழு வருடங்களாக பயின்று வரும் நேயாவின் அடுத்த இலக்கு நட்டுவாங்கம் பயில்வது.