ஐயப்ப பக்த ஜனசபையினர்  காலை முதல் இரவுவரை பக்தர்களுக்கு அன்னதானம்

கார்த்திகை மாதம் ஒரு ஒளி பொருந்திய மாதம்
கார்த்திகை மாதம் ஒரு ஒளி பொருந்திய மாதம்

கார்த்திகை மாதம் ஒரு ஒளி பொருந்திய மாதம்

06.12.2022 திருக்கார்த்திகை திருநாளன்று   இல்லங்கள் தோறும் மண் அகல் விளக்குகளும்  பித்தளை வெண்கல வெள்ளி குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு எங்கெங்கு காணினும் ஒளி வெள்ளமாக இருக்கும்.

இந்த தீபத் திருநாளை திருவண்ணாமலை அண்ணாமலையார்  திருக்கோவிலில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் மலை மேல் ஏற்றும் தீபதரிசனத்தைக்  காண வருவார்கள். கிரி வலம் வருவார்கள். லட்சோப லட்சம் ஜனங்கள் திரளுவார்கள்  காணக் கண்கோடி வேண்டும்.

அத்தகைய திரு நாளான 06.12.2022 அன்று   சென்னை மண்ணடியைச் சேர்ந்த சத்குருநாதர் ஐயப்ப பக்த ஜனசபையினர்   காலை முதல் இரவுவரை பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள் . அவர்களுடன் பக்தஸ்வரா பஜன் மண்டலியும் இணைந்து பக்தஸ்வராஸ் ஸ்ரீஅக்க்ஷ்யாவின் மூலம் அன்னதானம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.




இந்த அன்னதானத்தில்  சுமார்  5000/-பக்தர்களுக்கு மேல் பங்கு கொண்டு  உணவு உண்பார்கள். தீபத் திருநாளன்று மாலை 05.00 மணிமுதல் அண்ணாமலை தீபம் ஏற்றும் அந்த புனிதமான வேளையில் பக்தஸ்வரா பஜன் மண்டலியின் நாமசங்கீர்த்தனம் சுமார்   இரண்டு அல்லது  இரண்டரை மணி நேரம் நடைபெறும். நாமசங்கீர்த்தனத்துடன் அண்ணாமலை தீபத்தை வணங்குவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த அன்னதான கைங்கர்யத்தில் பங்கு கொள்ள  விரும்பும் அன்பர்கள்  தங்களால் முடிந்த நன்கொடையை கீழ்கண்ட வங்கிக் கணக்குக்கு  மின் அஞ்சல்மூலம் அனுப்பிவிட்டு தகவல் தெரிவிக்கவும்.  காசோலை மூலமும் நன்கொடை அளிக்கலாம். காசோலை மூலம் நன்கொடை அளிப்பவர்கள் முன்கூட்டியே விலாசம் தெரிவித்தால் எங்களது மண்டலி உறுப்பினர்  வந்து நேரிடையாகப் பெற்று கொள்வார்கள்.

கூகுள் பே மூலம்  நன்கொடை அளிக்கும் வசதியுள்ளது . முன்கூட்டியே தெரிவித்தால் கூகுள் பே விவரம் அனுப்பப்படும்.




வங்கி கணக்கு விவரம்

BHAKRHASWARAAS  SHREE AKSHAYA

SB A/c no: 053 201 000 22768

BANK OF BARODA , T.NAGAR  BRANCH , CHENNAI 600 017

IFSC : BARB0THEAGA

(note in IFSC CODE the fifth letter is ZERO)

காசோலை ட்அனுப்புபவர்கள் BHAKTHASWARAAS SHREE AKSHAYA என்று எழுதி கிராஸ் செய்து BHAKTHASWARAA BHAJAN MANDALI

c/o Lakshmi ஐNarayanan, 19,  Venkatesan Street T.NAGAR   CHENNAI 600 017, என்ற விலாசத்திற்கு அனுப்பவும்

மேலும் விவரங்களுக்கு 9840218297 S.SRIDHARAN, 9940021415 CHOUDRY, 98416 67059 N.R.K.MURTHY தொடர்பு கொள்ளவும்