Honble Chief Minister handed over 2nd instalment of Corona cash Relief and essential commodities to Rice card holders

Honble Chief Minister handed over 2nd installment of Corona cash Relief and essential commodities to Rice card holders

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று
தலைமைச்‌ செயலகத்தில்‌, 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித்‌ தொகை இரண்டாம்‌ தவணையாக 2 ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கும்‌ திட்டத்தையும்‌, 14 த்தியாவசிய மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை வழங்கும்‌ திட்டத்தையும்‌ தொடங்கி வைக்கும்‌ அடையாளமாக 10 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம்‌ தவணை நிவாரணத்‌ தொகை மற்றும்‌ மளிகைப்‌ பொருட்கள்‌ தொகுப்பினை வழங்கினார்கள்‌.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை தேர்தல்‌-2021 தேர்தல்‌ அறிக்கையில்‌, கொரோனா தொற்றால்‌ செயல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால்‌ வாழ்வாதாரங்கள்‌ பாதிக்கப்பட்டுள்ள மக்களின்‌ துன்பங்களைப்‌ போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள்‌ அனைத்திற்கும்‌ ஆறுதல்‌ அளிக்கும்‌ வகையில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பிறந்த திருநாள்‌ முதல்‌ ரூ.4000/- வழங்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உறுதியளித்திருந்தார்கள்‌.

Honble Chief Minister handed over 2nd instalment of Corona cash Relief and essential commodities to Rice card holders
Honble Chief Minister handed over 2nd instalment of Corona cash Relief and essential commodities to Rice card holders

அதனடிப்படையில்‌ கொரோனா நோய்‌ தொற்றின்‌ காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும்‌ வகையிலும்‌, பெருந்தொற்று நேரத்தில்‌ பொதுமக்களின்‌ வாழ்வாதாரத்திற்கு உதவும்‌ வகையிலும்‌, ரூ.4196.38 கோடி செலவில்‌, மே மாதத்தில்‌ 2,09,81,9900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்‌ தொகைக்கான முதல்‌ தவணை ரூ.2000 வழங்கும்‌  திட்டத்தை 10.5.2021 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்கள்‌.

அதன்‌ தொடர்ச்சியாக, தற்போது, ஜுன்‌ மாதத்தில்‌ ரூ.4196.38 கோடி செலவில்‌ 2,09,81,900 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத்‌ தொகைக்கான இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கும்‌ திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று தொடங்கி  வைத்தார்கள்‌.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால்‌ பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களின்‌ சிரமத்தை குறைக்கும்‌ வகையில்‌, மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வழங்கப்படும்‌ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 28.5.2021 அன்று அறிவித்தார்கள்‌.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.844.51 கோடி செலவில்‌, 1 கிலோ கோதுமை மாவு, 1 கிலோ உப்பு, 1 கிலோ ரவை, 1/2 கிலோ சர்க்கரை, 500 கிராம்‌ உளுத்தம்‌ பருப்பு, 250 கிராம்‌ புளி, 250 கிராம்‌ கடலை பருப்பு, 100 கிராம்‌ கடுகு, 100 கிராம்‌ சீரகம்‌, 100 கிராம்‌ மஞ்சள்‌ தூள்‌, 100 கிராம்‌ மிளகாய்‌ தூள்‌, 200 கிராம்‌ டீ தூள்‌, குளியல்‌ சோப்பு மற்றும்‌ துணி சோப்பு அடங்கிய 14 அத்தியாவசிய பொருட்கள்‌ அடங்கிய மளிகை தொகுப்பினை வழங்கும்‌ திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று தொடங்கி வைத்தார்கள்‌.

Honble Chief Minister handed over 2nd instalment of Corona cash Relief and essential commodities to Rice card holders
Honble Chief Minister handed over 2nd instalment of Corona cash Relief and essential commodities to Rice card holders

இந்த நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு கூட்டுறவுத்‌ துறை அமைச்சர்‌ திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ திரு. அர. சக்கரபாணி, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ. இறையன்பு, இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ திரு. முகமது நசிமுத்தின்‌, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழக மேலாண்மை இயக்குநர்‌ / உணவுப்‌ பொருள்‌ வழங்கல்‌ மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறை ஆணையர்‌ டாக்டர்‌ ஆர்‌. ஆனந்தகுமார்‌, இ.ஆ.ப. கூட்டுறவு சங்கங்களின்‌ பதிவாளர்‌ முனைவர்‌ இல. சுப்பிரமணியன்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.