சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழா

சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழா
சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழா

சென்னை அசோக் நகரில்  கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் தில்லைக் கூத்தன் சிலம்பப் பாசறையின் ஏற்பாட்டின் மாபெரும் சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழா சிலம்ப இமயம், இராஜ மகாகுரு கழுகுமனையார் செ.சந்திரசேகரன் B.Sc, B.L அவர்கள் ஆசியுடன் வெகு சிறப்பாக நடை பெற்றது.



தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத் தலைவர் (பொ) வளசை முத்து ராமன், மேற்படி விழாவுக்கு தலைமையேற்று, துவக்கி வைத்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும் சிலம்ப வீர வீராங்கனைகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு குத்து வரிசை விளையாட்டுக் கழக பொதுச்செயலாளர் இரா.கலைச்செழியன் நெய்வேலி மற்றும் உலக சிலம்ப சம்மேளனம் தலைவர் இராஜ்குமார் பாண்டிச்சேரி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழா
சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழா



கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கழுகுமனை ச.சுந்தரசோழன், ஆலோசனைகளின் படி நடைபெற்ற மாபெரும் சிலம்ப தகுதிப் பட்டை வழங்கும் விழாவில்
பிரதம பயிற்சியாளரும் மூத்த பேராசானுமான அறந்தாங்கி முத்துக்குமார், பொதுச்செயலாளரும் பேராசானுமான அறந்தாங்கி பாலு என்கிற S.V. பாலசுப்பிரமணியம், சிலம்ப ஆசான்கள் கும்பகோணம் முகிலன் மற்றும் பட்டுக்கோட்டை மணிகண்டன், சிலம்ப பயிற்சியாளர்கள் பாலாஜி மற்றும் அருன் குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

தகுதிப்பட்டை வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த கழுகுமனையார் சோழா மார்ஷியல் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் தில்லைக்கூத்தன் சிலம்பப் பாசறையின் ஆசான் சென்னை பிரபாகரன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று நன்றி கூறினார்.